எட்டு

55 7 0
                                    

அன்று அவ்வாறு சம்பவங்கள் நடக்கும் முன்பு,...

அவள் வீட்டின் உப்பரிகையில் (balcony) இருவரும் மழையை ரசித்து நின்றிருந்தோம். கடைசியாக இருவரும் வாய்மொழியில் பேசியது அன்று காலை போன் காலில் தான். அதன் பின் இதுவரை இருவரின் உதடுகளும் வார்த்தை உதிர்க்க இணையவோ பிரியவோ இல்லை. மனதின் உணர்ச்சி வழியே இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.

இரவு வானின் கரு நிறத்தில் மின்னும் நட்சத்திரங்களுக்கு இடையே சிகப்பு இரத்தினங்கள் பதித்தது போல் இரு வண்ணத்துப்பூச்சிகள், அவள் இதழின் சிவப்பை ஒற்றிய செம்பருத்தி மலரின் மீதமர்ந்து மஞ்சள் நிற மகரந்தத் தேனைப் பருகி, ஒன்றன் பின் ஒன்று உலவளாவி உயிர் கலந்து காதல் வளர்க்கும் காட்சி, கண்ணைக் கவர்ந்தது. அந்தக் காட்சி

"செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூசை
நெருக்கமே காதல் பாஷை"

இந்த வரிகளை நியாபகப்படுத்தியது மட்டுமல்லாமல், அவ்வரிகள் கொண்ட அத்தனை காதல் ஆசையையும் ஒரு சேர என்னுள் பாய்ச்சியது. இனி சொல்லவா வேண்டும், அவ்வரிகள் தந்த தாக்கத்தின் விளைவாய் வந்த ஏக்கத்தினை? ஆம். மகரந்தம் என்னுள் எழும்ப அதை அவளின் மதுகுடத்தில் சேர்த்து, இருவரும் இணைந்து மதுரகாணம் பாட வேண்டும் என்ற ஏக்கம் என்னை சூழ்ந்தது. என் ஏக்கத்தை அறிந்து பரிகாசம் செய்வது போல் இருந்தது அவ்வறையில் சுவற்றில் உறைந்த பல்லியின் "ச்ச்..ச்ச்.." என்ற கவுளி சத்தம்.

"என்னுயிர் காதலிக்கு,"Where stories live. Discover now