7

554 30 19
                                    

நேரம் அதிகாலையை நெருங்கி இருக்க தன் பிரசவத்தின் இறுதி கட்ட போராட்டமாய் "அம்மாஆஆஆஆ....." என்ற பெரும் கதறலுக்கு பிறகு தன் முதல் குழந்தையை பெற்றெடுத்தாள் நந்தினி...

அந்த வலியையும் தாண்டி மனதில் ஒரு இதமான நிம்மதி பரவ, தன் உதிரத்தில் நனைந்த உயிரை காணும் பரவசத்துடன் கண்கள் அலைமோதின.

மருத்துவர் நந்தினிக்கும் அவள் குழந்தைக்கும் ஆனா உறவை (தொப்புற்கொடி) வெட்டிக் கொண்டிருக்க, அருகில் இருந்த செவிலியர் குழந்தையை கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தார்.

மருத்துவரின் செயலைக் கண்டும் காணாமல் திரும்பிய நந்தினியின் பார்வை, செவிலியரின் கையில் இருந்த குழந்தையை கண்டதும் அசையாமல் நிலைக்குத்தி நின்றது.

சிவப்பு நிற உதிரத்தில் நனைந்த சாதாரண குழந்தையும்
அல்லாமல், நீல நிற பார்க் கடலில் நனைந்த கிருஷ்ண பகவானும் அல்லாமல், கறுப்பு நிற சாக்கடை
நீரில் தவறி விழுந்த பொம்மையென, அசையாமலும், அழாமலும் கிடந்த குழந்தையை கண்ட ஒரு சில நொடிகளிலேயே கண்களில் வெள்ளமென கண்ணீர் பெருக, ஏதென்று சொல்ல தெரியாமல் துக்கம் தொண்டையை அடைக்க "என்ன... ஆச்சு... டாக்டர்... ஏஏ.. குழந்த அழமாட்டிங்குது..." என்று திக்கி திணறி வினவினாள் நந்தினி.

பொதுவாக குழந்தை பிறந்ததுமே அதை தாயின் மார்பின் மீது போட்டு குழந்தை ஆணா பெண்ணா என தெரிவித்து, குழந்தைகான முதல் முத்து(முத்த) முத்திரையை, தாயின் முலம் அதன் உச்சியில் பதிபித்த பிறகே குழந்தையின் தொப்புற் கொடியை வெட்டி அதை சுத்தம் செய்ய எடுத்து செல்வது அந்த(பொதுவாக எல்லா) மருத்துவமனையின் வழக்கம்.

ஆனால் பிறக்கும் போதே இந்த மண்ணுலகை கண் திறந்தும் பார்க்க மறந்த மகனைப் பற்றி, பத்து மாதம் சுமந்து அதை பார்க்க ஏங்கும் மடந்தை மங்கையின் விழிகளை நோக்கி, பாவம் என்னவென்று மொழிவாள் அந்த மருத்துவச்சி.

ஒரு மருத்துவராய் இது போன்ற எத்தனை சம்பவங்களை சந்தித்து இருந்தாலும், தாய்மையின் முழுமையை உணர்ந்த பெண்மை, அனைத்து பெண்களின் தவறிய தாய்மைக்கும் இறங்கல் காட்டதானே செய்யும். இதுபோ‌ன்றதொறு தர்ம சங்கட நிலையில் இருந்து தப்புவதற்காக எதுவும் பேசாமல் தன் வேலைகளில் மூழ்கி இருந்த மருத்துவர் சௌமியா, நந்தினியின் கேள்வியிலும் அவள் வார்த்தைகளில் இருந்த வலியையும் கண்டு, என்ன சொல்வதென்று தெரியாமல் உருகுலைந்து போனார்.

உன்னுள் நான் ஒரு தொடர்கதை...Where stories live. Discover now