பகுதி - 4

4.6K 211 52
                                    

"நீ என்ன சொல்ர சாரா !! அஹமட் அப்படி எந்த தவறும் செய்ய மாட்டானே?!"

"அது எனக்கும் தெரியும் ஷனா ஆனால் இதில் என்ன கொடுமைனா அதற்கு நான் தான் காரணம்னு சொல்ரான் பாரு நானும் எவ்வளவோ தூரம் சொல்லி பார்த்தாச்சு என்ன பார்த்தாலே எங்க இருந்து தான் அவ்வளவு கோபம் வருதோ!!"

அந்த நாள்....

சந்தர்ப்ப சூழ்நிலை காட்டிய விளையாட்டால் இருவரது திருமணமும் எதிர்பார்க்காத விதமாக நடந்தேறியது.

எங்களுடைய பேச்சை மீறி வேறு ஒருவனை கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல
உன்னை இவ்வளவு காலம் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்போம் ஆனால் நீ இந்த சின்ன விடயத்துல கூட எங்க பேச்ச கேட்கல அதனால் இதற்கு அப்றொம் இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது அங்கே போனால் போனது தான் இதன் பின்னர் இந்த பக்கத்திற்கும் வரக் கூடாது என அந்த வீட்டுடனான அவளின் உறவை முறித்து விட்டார் மாமா நிஸார்.

இதைக் கேட்ட அர்ஷாட் "அவ இங்க வர வேணாம்னா நானும் இங்க இருக்க மாட்டேன் "என்றான் ஆத்திரத்தில்

உடனே "நானா நீ எங்க இருக்க போற ? அவங்க என்னை தானே வர வேணாம்னு சொல்ராங்க நீ எதற்காக "என பேசி முடிப்பதற்கு இடையே

"நீ சும்மா இரு சாரா நான் எங்கயாச்சும் இருந்துகிறேன் " என்று சொல்ல

"நீ எங்க வீட்டுக்கு வாயேன்டா " என்றான் அஹமட்.

"இல்லை டா உங்க வீட்ல சாராவயே ஏத்துபாங்கலான்னு தெரியல இதுல நான் வேற எதற்கு....வேணாம்டா அது நல்லா இருக்காது" என்றபடி அங்கு நின்று இருந்தவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பியவன்
"சாராவை கொண்டு போய் விட்டுட்டு வர யார கூப்பிட்டாலும் வர மாட்டீங்கனு தெரியும் அதனால நான் யாராயுமே கூப்பிட போறதும் இல்ல....வா மச்சான் நாம போகலாம் என்றான் அஹமட் ஐப் பார்த்து.

"டேய்...நீ எதற்காக டா இவங்கள கூப்பிட்டுகிட்டு உன் தங்கச்சிக்கு எல்லாமே நீ தானே அப்போ நீ மட்டும் வந்தா போதும் "
என்ற அஹமட்

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now