அத்தியாயம் (20)

3.5K 159 37
                                    

மறு நாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கண் விழித்துவிட்டால் ஆரோஹி. Jet lag காரணமாக சரியான தூக்கம் வர மறுத்தது. நித்திரைக்கு செல்லும் முன்பு ப்ரித்வி வேறு கழுத்து அது இதுவென்று அவள் மறக்க நினைத்ததை எல்லாம் நினைவு படுத்தி விட்டான். குளித்து தயாராகி வந்த போது கீழே living room இல் ராதாமோகன் அங்கிள் ஜாகிங் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.

"குட் மார்னிங் அங்கிள்" என்றாள்.

"குட் மார்னிங் ஆரோஹி. என்ன இவ்வளவு காலைலயே எழுந்துட்ட? புது இடம்ங்கறதால சரியா தூக்கம் வரலையா?"

"ஹ்ம்ம்..." என்று சொல்லி சிரித்தவாறு வந்து அவர் முன் அமர்ந்து கொண்டாள்.

"Let me make a cup of coffee for you.." என்று சொல்லி எழுந்து கொண்டவரை

"இல்லை அங்கிள் வேண்டாம் நானே போட்டுக்குறேன்.." என்று கூறி தடுத்தாள் அவள்.

"No.. No.. நீ எவ்வளவு பெரிய cook ஆ வேண்ணா இரு ஆனால் என் வீட்டுக்கு நீ கெஸ்ட். நீ போய் உட்காரு நான் போய் உனக்கு Coffee போட்டுட்டு வாரேன். நான் சூப்பரா Coffee போடுவேன்ம்மா என்னை நம்பு.." என்றார்.

"நான் இதை என் வீடு மாதிரி நினைச்சிக்கலாம்னு இருந்தேன். நீங்க என்னை guest நு சொல்லி தூரமா நிறுத்தப் பார்க்குறீங்க....."

"அப்படின்னா ஒன்னு பண்ணு உனக்கு Coffee போடறதோட சேர்த்து இன்னைக்கி breakfast கூட நீயே பண்ணிடு" என்று சொல்லி அவளிடம் சரெண்டர் ஆகியது போல கை இரண்டையும் தூக்கிக் கொண்டார் ராதாமோகன்.

அவரை பார்த்து சிரித்து விட்டு கிச்சனுக்குள் சென்றாள் ஆரோஹி. உள்ளே நுழைந்து சிறிது நேரத்தில் எல்லாம் எது எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டாள். Coffee போட்டு குடித்து விட்டு ராதாமோகன் கூறியது போல அனைவருக்கும் breakfast தயார் செய்து dinning table இல் கொண்டு வந்து வைத்தாள். ஏழு மணிக்கெல்லாம் பல்லவி கீழே வந்தாள். எப்போதும் போல கிச்சனுக்குள் நுழைந்தவள் கிச்சனில் ஆருவை கண்டு திகைத்தாள்.

"குட் மார்னிங் ஆருக்கா. என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்து வந்துட்டிங்க? Coffee போட்டு தரட்டுமா?"

ஆரோஹிOù les histoires vivent. Découvrez maintenant