38

2.4K 78 0
                                    

இப்போ நாம சண்டையை பாப்போமா

ஸ்வஸ்திகா "போஸ்டுஹ் மரம் மாறி வளந்துருகியே கொஞ்சமாச்சும் அறிவு வேணாம் இப்டி தான் தட்டி விடுவியா "என்க

அவனோ "ஹே குட்ட கத்திரிக்கா திடீர்னு நீ நா கைய ஆட்டேல எங்க இருந்தோ மொளச்சு வந்தா நா என்ன பண்றது"என்க

அவளோ "என் உயரத்த வச்சு கலாய்க்காதன்னு பல தடவ சொல்லிட்டேன்டா தடிமாடு கண்ணை முன்னாடி தான வச்சுருக்க பொடதிலயா வச்சிருந்த நா உன் முன்னாடி தான ஒரு கைல தட்டுல குங்குமமும் இன்னொரு கைல தட்டுல மஞ்சளும் எடுத்துட்டு வந்துட்டு இருந்தேன் கொரங்கு மாறி ஒரு எடத்துல நிக்காம கையையும் காலையும் ஆட்டிகிட்டு தட்டி விட்டுட்டு வியாக்யானம் வேற பேசுறியா.ஏன் ட்ரெஸ்ஸுஹ் பாரு எப்படி ஆய்ருச்சுனு "என்று தனது சுடிதார் வீணாகிவிட்டதே என்று புலம்ப

அவனோ "ஹே குட்டகத்திரிகா இப்போ தாண்டி மஞ்சளா மங்களகரமா இருக்க "

அவளோ "என் வைட் சுடியை மஞ்சளாகிட்டு எவ்ளோ தைரியம் இருந்தா இப்போ தான் நல்லாருக்குனு சொல்லுவ"என்க

அவனோ "இப்போ என்ன தாண்டி பண்ண சொல்ற காண்டேத்திகிட்டு"என்க

அவளோ "எனக்கு ஒரு வழி சொல்லிட்டு போ "என்று குங்குமத்தை கையில் வைத்து கொண்டு கேட்க அவனோ வழிதானே என்று அருகில் வந்தவன் வேண்டுமென்றே குங்குமம் இருந்த தட்டை தட்டி விட அது அவள் உச்சியில் மொத்தமாய் கொட்டியது .

அதிர்ந்தவள் நெற்றி வகுட்டில் முழுதும் குங்குமம் இருக்க அதை பார்த்து அரண்டவள் "யு யு ....."என்று வார்த்தை தந்தி அடிக்க அவனுக்கும் அது சற்று சங்கடமாய் போனது அவன் சாரி என்று கூற திரும்ப அவளோ அதற்குள் அதிதியின் அறைக்குள் சென்று கதவை சாற்றி விட்டால் .

இவன் இங்கேயே உறைந்து நிற்க அங்கே அறைக்குள் சென்றவள் கண்ணாடியில் நேர்வகுட்டில் மொத்தமாய் பதிந்திருந்த அந்த அழுத்தமான சிகப்பு நிறத்தை வருடியவள் பின் சமன் செய்து விட்டு குளியலறைக்குள் சென்று விட்டால் .

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now