5.

2.6K 124 1
                                    

சஞ்சனா பயத்துடன் திரும்பி பார்த்தாள்.அவள் மனம் பட படத்தது.அவள் அருகில் தடுமாறி விழுந்தவன் இப்போது அவள் கையை பிடித்துக் கொண்டு இருந்தான்.

"யாரு நீ.இங்க என்ன பன்னர",என்று உளறினான்.

"நான் ...........ஜீவாவை பார்க்க வந்தேன்.கையை விடு நான் போகனும்",என்றாள்.

ஆனால் அவன் அவள் கையை விடாமல் கதவை எட்டி உதைத்தான்.கதவு பெரும் சத்தத்தோடு மூடியது.

"இந்த நேரத்தில் ஜீவாவை பார்க்க வந்தயா.நீ யார் என்று தெரியாமல் உன்னை போக விட மாட்டேன",என்றான்.

அவன் போதையில் இருக்கிரான்.அவனோடு பேசி பயனில்லை என்பதை புரிந்து கொண்டாள் சஞ்சனா.அவனை தள்ளி விட்டு வெளியே வர முயற்சி செய்தாள் ஆனால் அவன் அவள் முடியை பற்றி இழுத்தான்.

"நீ ரொம்ப அழகா இருக்க.உன் பெயர் என்ன",என்றான் அவள் இடுப்பை பிடித்தபடியே.

கத்தினால் தன் அம்மா அப்பா முழித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இதுவரை கத்தாமல் இருந்தாள்.இப்போது வேறு வழி இல்லாமல் கத்துவதர்க்கு வாய் எடுத்த போது கதவு திடீரென திறந்தது.

        அஷ்வின் தோளில் ஒரு பையோடு நின்று கொண்டு இருந்தான்.

இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.சஞ்சனா அவனை தள்ளி விட்டு அஷ்வின் அருகில் வந்து நின்றாள்.அவன் மீண்டும் அவள் கையை பிடிக்க வந்தான்.

அஷ்வின் அவனை "பளார்" என்று அறைந்தான்.அவன் சட்டையை பிடித்து தர தரவென வெளியே இழுத்து சென்றான்.அவனை பண்ணை வீட்டின் வெளியே தள்ளி இரும்பு கதவை தாழிட்டான்.திரும்பி வந்த போது சஞ்சனா புல்வெளியில் நின்று கொண்டு இருந்தாள்.

      சஞ்சனா அருகில் சென்றவன் அவளை சட்டென்று அறைந்தான்.சஞ்சனா அதிர்ச்சியில் அழ ஆரம்பித்தாள்.

"அவன் செய்தது தவறே இல்லை.உனக்கு இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை. தன்னை காப்பாற்றிக் கொள்ள தெரியாதவள் இரவில் தனியாக வரவே கூடாது.போ இங்கே இருந்து",என்று கத்தினான்.

அவள் அழுது கொண்டே வீட்டை நோக்கி சென்றாள்.

ஜிப்பை வெளியே நிறுத்தி விட்டு.உள்ளே நுழைந்தான் ஜீவா.கையில் இரண்டு பிரியாணி பொட்டளங்கள்.முதலில் அஷ்வின்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.பின் சஞ்சனா அழுவதை பார்த்து குழப்பம் அடைந்தான்.மனதில் ஒரு இனம் புரியாத பயம் தெரிந்தது.

காதலில் விழுந்தேன்Where stories live. Discover now