காலம் -15

486 44 108
                                    

விட்டத்தை வெறித்து கொண்டு கொசுவர்த்தியை சுழல விட்டவாறு அமர்ந்திருந்த ராமலிங்கம்... தன் அண்ணனின் வார்த்தைகளே மீண்டும் ஒலிக்க... அன்று அவன் வயிற்றில் கத்தி இறங்கிய வேகத்திற்கு இரும்பு கம்பிகளையும் மீறி கொண்டு எகிரி குதித்து அக்கம்பியாலே தன் கழுத்தை நெறித்து பாதி கிழித்து விழ வைத்த அவனின் அதே காட்சி நினைவில் வர... சட்டென எழுந்தவர்... அவரின் மனைவி ஷீலா வைத்து விட்டு சென்ற தேனீரை எடுத்து அருந்த தொடங்கினார்...

அவ்வீட்டிலே ஒரு சோபாவில் அமர்ந்து தனக்கு தெரியாத ஆங்கிலத்தில் ஏதோ முதுகலை முடித்ததை போல் மூக்கு கன்னாடியை ஏற்றி இறக்கி ஆங்கில செய்தி தாளை தலை கீழாய் பார்க்கிறோம் என்று கூட கவனிக்காமேல் அதை பார்த்து கொண்டிருந்தார் வேதா...

ஷீலா அவரை கண்டு சலித்தவாறு சமையலை காண சென்றார்... ராஜலிங்கம் அவரின் அறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்...

வாருங்கள் இக்குடும்பத்தை பற்றி ஒரு ப்ரோமோ பார்த்து விட்டு வருவோம்...

மூத்த வாரிசு ராஜலிங்கம் இளைய வாரிசு ராமலிங்கம்... இரண்டும் பெற்றோருக்கு அடங்காத தருதலைகள்..

தீரா : ஓவரா போறோமோ..... போவோம்.. என்ன பன்னிடுவாய்ங்க...

இருவது வருடத்திற்கு மேலாகவே இவ்வூரில் முக்கிய பதிவியில் நிலைத்து நிற்பவர் லிங்கம்... அவ்வூருக்கே லிங்கம் தான் கடவுள்.... அவர் சொல் தான் அவர்களுக்கு வேதவாக்கு... எது சொன்னாலும் கண்ணை மூடி கொண்டு நம்புவார்கள்...

தீரா : அவருக்கு இருவது வயசு தா ஆகுதுன்னு சொன்னா கூட நம்புவாய்ங்க....

பணத்திற்காக சுவாசிக்கும் காற்றை கூட விற்க தயங்க மாட்டார்... அந்த அளவிற்கு சுயநலவாதி... ஆனால் அவர் குடும்பத்திற்கு தீங்காய் எதையும் இழைத்து விட மாட்டார்... பாசமெல்லாம் இல்லை... கௌரவம் மட்டும் தான்....

இவர் குணத்திற்கு ஏற்றவாறே... அவருக்கு துணையும் அமைந்தது தான் தாமதம்... இருவரும் ஏதோ இக்கிராமத்தை தங்கள் காலடியில் உள்ள ஒரு ராஜ்ஜியம் என்ற ரேஞ்சிற்கு நினைத்து நடத்த தொடங்கி விட்டனர்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now