காலம் - 51

405 41 97
                                    

ஆராவாரமாய் வரவேற்கப்பட்ட தமையந்தியின் முகத்தை கண்ட வேதா அது தெளிவுற்று மிகவும் சந்தோஷத்தில் மிளிர்வதாய் தெரிய... அதை விட அவளது முக ஜாடையை உரித்து வைத்து அவள் கரங்களில் இருந்த ஆண் குழந்தையை கண்டவர் இன்னும் மகிழ்ச்சி அடைந்தார்..

லிங்கம் : பாப்பா எப்டி டா இருக்க ... வா வா... என முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மகளை வரவேற்த்தார்... குழந்தையை கணவனிடம் கொடுத்த தமையந்தி லிங்கத்தை அணைத்து கொண்டு ஒரு வருடம் தந்த பிரிவை எண்ணி கண்ணீர் சிந்தினார்...

பின் அதை புன்னகையுடன் துடைத்து விட்ட லிங்கம்...

லிங்கம் : என்ன இப்டி இவ்ளோ சீக்கிரத்துல தாத்தா ஆக்கீட்டியே பாப்பா... என நெற்றியில் முத்தம் வைக்க... மெல்ல தலை தூக்கிய வெட்கத்துடன் சிரித்த தமையந்தி வாசலில் கேட்ட குரலின் கூற்றை கேட்டு முகம் சிவக்க பாலுவின் பின் ஒளிந்து கொண்டாள்...

தர்மபாஸ்கர் : அட என்ன லிங்கம்... ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி சோர்ந்து மாப்பிள்ளையோட ஊருக்கு போன புள்ள தான்... நா சொன்ன மாரி பத்து மாசத்துல புள்ளையோட வந்து நிக்கிரா பாரு... என கேலியாய் கூறி கொண்டே உள்ளே வர... தமையந்திக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அதை புன்னகைத்து சமாளித்து கொண்டாள்...

வேதா : என் பேரன என் கிட்ட குடுங்க மாப்பிள்ளை... என வாயெல்லாம் பல்லாக குழந்தையை பாலுவிடமிருந்து வாங்கி கொண்டார் வேதா... வேதாவின் முகத்தை கண்டதும் வீரிட்டு அழுதான் குழந்தை...

தாயும் மகளுமாய் அவன் அழுகையை நிறுத்தி வைக்க முயல ... அவனோ நிறுத்துவேனா என்பதை போல் கத்தி அழுது கொண்டிருந்தான்...

ஷீலா : அக்கா இங்க குடுங்க ... என குழந்தையை வாங்கியவர் ... முதுகை தட்டி கொடுத்தவாறு சற்று குழந்தையை தூக்கி கொண்டு காற்றோட்டமாய் வெளியே சென்றார்... அனைவரும் சில நொடிகளில் குழந்தையின் அழுகை நின்றதை கேட்டு ஆச்சார்யமாக ... ராமு மற்றும் லிங்கத்தின் இதயத்தில் ஷீலாவை நினைத்து சுருக்கென ஒரு வலி எடுத்தது....

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now