ராஜ ரகசியம் (1 அத்யாயம்)

37 3 2
                                    

ராஜ ரகசியம்


முகவுரை

என் நீண்ட நாளைய ஆசை இந்த நாவலாகும். தமிழகத்தை பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்து வந்துள்ளனர் ஆயினும் அதில் ஒரு சிலர் தான் வீரத்திலும் பெருந்தன்மையிலும் ஒருங்கே உயர்ந்தவராக இருக்கின்றனர். நமது கதையின் நாயகனும் (அதற்குள் நாயகன் அறிமுகம் கிடைத்து விடுமா) அவ்வாறே அமையப் பெற்றவன். இந்தக் கதையில் முதன்மையான கதாபாத்திரங்கள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்கவர்கள் ஆவர். கதையின் சுவைக்காக சிறிது என் கற்பனைக் குதிரையையும் ஓட விட்டிருக்கிறேன். அனைவரும் இந்த சரிதத்தை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்.இந்த சரித்திரத்தை முழுதும் அனுபவிக்க நிகழ்காலத்தில் இருந்து ஒரு 1500 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழகத்திற்கு செல்வோமாக.

1.வானில் நிலா கையில் நட்சத்திரம்

பண்டைகாலத்து காஞ்சி மாநகரம், வயல் சூழ்ந்த பகுதிகளும், அறிவிற்சிறந்தோர் வாழும் வீடுகளும், அளவில்லா பொருட்கள் இடம்பிடித்த தெருக்களும் என்று காண்போரை தன வளமையினால் மூச்சடைக்க வைக்கும். இன்றும் அப்படத்தித்தான் முழுநிலா வானத்தை அழகாக அலங்கரித்துக்கொண்டிருந்தது. ஆனால் அங்கே மக்களின் மனதை ஏக்கமும். இருளும் சூழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனை வாசலில் புரவிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் வாயிலில் ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் மன்னன் சிம்மவர்மன் நின்று கொண்டிருந்தான். அவனை நோக்கி ஆயுதம் ஏந்திய வீரன் ஒருவன் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும் "அரசே அவர்கள் உத்திரமேரூர் வரை வந்து விட்டார்கள் என்று ஒற்றன் தகவல்"

"உத்திரமேரூர் வரை வந்து விட்டார்களா? இருக்கட்டும் இன்று எது நடந்தாலும் போரில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. பேரிகை முழங்கட்டும். சேனாதிபதி நம் வீரர்களை தயார் படுத்துங்கள் இன்று போரில் வென்றால் வாழ்வோம் இல்லையேல் வீர மரணத்தை தழுவுவோம்.

ராஜ ரகசியம்Where stories live. Discover now