ராஜ ரகசியம் (2)

30 1 2
                                    

2.இது யாருடைய இரத்தம்??

மாறலாதன், அமைச்சர், பண்டிதர் மூவரும் இளவரசனை தூக்கிக்கொண்டு பின்வாசலை நோக்கி சென்றனர்.

"தளபதியாரே அரசியாரை இவ்வாறு தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கென்னவோ சரியாகப் படவில்லை" என்றார் அமைச்சர்

"எனக்கும் இதில் துளியும் விருப்பமில்லை ஆயினும் நமக்கு வேறு வழியில்லை அமைச்சரே. இளவரசனை எங்காவது பத்திரமாக விட்டுவிட்டு நான் மீண்டும் கோட்டைக்கு தான் வர சித்தமாயிருக்கிறேன்"

"பண்டிதரே தாங்கள் சொன்ன பாணன் வீடு எந்த திசையில் உள்ளது? இங்கிருந்து எத்தனை காத தூரம் இருக்கும்?"

"இங்கிருந்து ஒன்றரை காத தூரம் இருக்கும் தளபதியாரே"

"அவ்வளவு தொலைவு எவ்வாறு செல்வது வேண்டுமென்றால் என் வீட்டிலேயே தங்க வைக்கலாம்" என்றார் அமைச்சர்

"இல்லை அமைச்சரே அது தன் சிறந்த இடம் அந்த தூரத்தில் இளவரசனை வைத்தால் தான் இந்த அரக்கன் தேட மாட்டான். அதுவுமின்றி நமது இல்லங்களில் இந்நேரம் அவன் தனது படைகளை அனுப்பி கண்காணிக்க வைத்திருப்பான் எனவே அது உசிதம் அன்று"

"தாங்கள் சொல்வது சரி தான் பாணன் வீட்டிற்கு எப்படியாவது நம்மை அந்த வரதன் தான் கூட்டி செல்ல வேண்டும்" என்றார் பண்டிதர்

மூவரும் கோட்டையை கடந்து ஒரு சிறிய மண் சாலையில் நடந்து சென்றனர் அப்பொழுது அவர்கள் பின்னால் யாரோ தொடர்வது போன்ற சந்தேகம் தளபதியாருக்கு வந்தது. அவர் திரும்பிப் பார்த்தார் அங்கே யாரும் இல்லை. மேலும் நடக்கத்தொடங்கினர் அப்பொழுது அமைச்சரின் காதோடு தளபதியார் கூறினார்

"அமைச்சரே யாரோ நம்மை பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று நினைக்கிறன் நீங்களும், பண்டிதரும் முன் செல்லுங்கள் நான் யாரென்று பார்த்து விட்டு வருகிறேன்"

ராஜ ரகசியம்Where stories live. Discover now