என் ஆச கருப்பட்டி- 1

2.1K 24 2
                                    

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரிகா.

"இதோட 11வது. வரவன் இவள பாத்துட்டு அய்யோ அம்மா னு அளறிட்டு ஓடுறானுங்க. என் மக கல்யாணம் இதால தள்ளிப் போய்கிட்டு இருக்கு. இங்க பாருங்க சட்டு புட்டு னு என் தம்பிய கட்டி வச்சிரலாம். ஏதோ நான் சொன்னதுக்காக அவன் இவளுக்கு வாழ்க்க தருவான்" என சித்தி புலம்ப ஆரம்பித்து இருந்தாள்.

இது ஒன்றும் புதிது இல்லை. பல வருடங்களாக நடப்பதுதான். சித்திக்கு தும்மல் வந்தால் கூட தாரிகாவை தான் காய்த்து எடுப்பாள்.

"தரித்திரம், பொறந்ததும் ஆத்தா காரியை கொன்னுட்டு இப்ப எங்க உசுர வாங்குது, சை" என்றாள் சித்தி செங்கமளம்.

"எப்ப பாரு அவள கரிச்சுக் கொட்டாட்ட உனக்கு சோறு உள்ள எறங்காத செங்கு? அவள திட்டித் திட்டி பாரு உனக்கு எப்படி மூச்சு வாங்குதுனு. இந்தாமா கொஞ்சம் தண்ணிக்குடி" என்று தண்ணிச்சொம்மை அவள் புரம் நீட்டினார்.

"ரொம்ப தான் கரிசனம். உங்களுக்கு இரண்டாந்தாரமா என்னிக்கு வாக்கப்படடேனோ அன்னிக்கே எனக்கு தரித்திரம் ஆரம்பிச்சுருச்சு" என மூக்கு சிந்த ஆரம்பித்து விட்டாள் செங்கமளம்.

இதையனைத்தையும் கேட்டவாரு வேறு உடை அணிந்து, முகம் கழுவிச் சமையலறை புகுந்து இரவு உணவு சமைக்க ஆரம்பித்துவிட்டாள் தாரிகா.

சோகமாய் இருந்தாலும் சோறு வேண்டும் அல்லவா. இவள் ஓரளவு வளந்தபின் சித்தி சமைப்பதை நிறுத்தி விட்டிருந்தாள். ஆனால் குறை கூறுவதை மட்டும் நிருத்தாமல் சிறப்பாகவே செய்துக் கொண்டிருந்தாள்.

சமைத்துக் கொண்டிருந்த தாரிகாவின் மனதில் பல கலவையான சிந்தனைகள். அம்மாவின் இறப்புக்கு பின் கைக்குழந்தையாக இருந்த தாரிகாவை பார்த்துக் கொள்வதற்காக சண்முகம் இரண்டாவதாக செங்கமளத்தை திருமணம் புரிந்தார்.

என் ஆச கருப்பட்டிWhere stories live. Discover now