என் ஆச கருப்பட்டி-10

686 19 0
                                    

தாரிகா அருகில் சென்று உற்று பார்த்தாள். தலையை சாய்த்து பார்த்தாள். இரு கண்களையும் மூடிக்கொண்டு, ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். எப்படி பார்த்தாலும் காட்சி மாறாமல் தெளிவாக தெரிந்தது.

'கன்பார்ம் இது நகங்களோட கீறல்கள் தான். எப்படி இங்க வந்துருக்கும்? யாராச்சும் நாய் குட்டியை இந்த அறைக்கு கூட்டிட்டு வந்துருப்பாங்ஙளோ!! ஆனா நகத்தோட தடத்தை பார்த்தா குட்டி நாய் மாதிரி தெரியலை. நல்லா பெரிய சைஸ் நாயா தான் இருக்கனும். அதுவுமில்லாமல் நாய் செம்ம கோபத்துடன் இருந்துருக்கனும். அவ்வளவு ஆழமாக நகங்கள் பதிந்து இருந்தது. எந்த நாயா இருக்கும்!!'

"ஆதி சார்"

ஆங்ங்ங்... என துள்ளி கொண்டு திரும்பினாள் தாரிகா.

விஜய் தான் நின்று கொண்டு இருந்தான்.

'அட சே இவனா' என நெஞ்சை லேசாக தடவி கொண்டு, "இப்படி சத்தம் இல்லாமல் பின்னாடி வந்து பயமுறுத்துரதே உனக்கும் உங்க சார்க்கும் வேலையா போச்சு" என்றாள்.

"சரியான பயந்தாங்கோலியா இருந்துகிட்டு எங்கள குத்தம் சொல்லாத" என்றான் சிரித்து கொண்டே

"ஆமா ஆமா நீங்க பெரிய மாவீரன். சார் முன்னாடி பம்முனதை தான் நாங்க பார்த்தோமே"

"அது சும்மா மரியாதைக்கு" என்றான் அசடு வழிந்து கொண்டு.

"ஊர ஏமாத்துவது போல என்னையும் ஏமாத்த பாக்காத. ஆமா என்ன இன்னிக்கு இந்த பக்கம். எப்போதும் அந்த ஹோட்டல் தான் கதினு கெடப்ப?"

'அது' என்று சிறிது தயங்கியவன் "ஒரு முக்கியமான வேலை விஷயமாக சார பார்க்க வந்தேன்".

"அதான பார்த்தேன், என்னடா பிரண்டு மேல பாசம் பொங்குதேனு நினைச்சேன்" என்றாள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு.

"நடிக்காத, செட் ஆவல" என்று சிரித்தான்.

"அது சரி, எதுக்கு ஆதி சார்னு சொன்ன"

என் ஆச கருப்பட்டிWhere stories live. Discover now