THIS WORK IS NOT MINE BUT IT IS WRITTEN BY MY GRANDFATHER PULAVARKO T.N. ARIVUOLI., M.A., M.Ed (புலவர்கோ தி.நா. அறிவுஒளி., க.மு., கல்.மு.,). I WISH TO CONVERT HIS WORKS INTO DIGITAL. SO HERE IT IS GUYS. THIS STORY IS A PART FROM HIS BOOK CALLED "OLI KADHAIKAL" (ஒளிக் கதைகள்) WHICH WAS PUBLISHED IN THE YEAR 1995 கிரேக்க நாட்டில் பல துறைகளில் சிறந்த கலைஞர்கள் வாழ்ந்தனர். ஓவியக் கலையில் யவன (கிரேக்க) நாடு மிகப் புகழ் பெற்றிருந்தது. சூக்சிசு என்பவனும் பார்ராசியசு என்பவனும் கிரேக்க நாட்டில் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களாக விளங்கினர். சூக்சிசுக்கும் பார்ராசியசுக்கும் கருத்து வேற்றுமை உண்டானது. ஒருவரை ஒருவர் வெறுத்தனர். 'சூக்சிசு சிறந்த ஓவியனா?' 'பார்ராசியசு சிறந்த ஓவியனா?' என்ற வினா எழுந்தது. ஊராரும் இந்தச் சிக்கலைப் பெரிதுபடுத்திப் பேசலாயினர்.