~18~

150 12 3
                                    

காலையில் விக்ரம் சொன்ன இடத்துக்கு போய் அடிப்பட்டுக் கிடந்த ஜோசபின் நிலைமை நேரில் கண்ட பின் அகிலனை பீடித்த அச்சம் விக்ரம் வரத் தாமதமாக மேலும் வலுத்தது. நண்பன் ஆபத்தில் மாட்டியிருக்கக் கூடும். எனவே போலிசாரின் உதவியை நாடுவதே நல்லது என பொழுது சாய்ந்தலிருந்தே வருணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் வருணோ 'விக்ரம் எப்படியும் வெற்றிகரமாக திரும்பிவந்து விடுவான்' என்று உறுதியாக நம்பினான். போலிசிடம் சென்றால் இத்தனை நாள் திட்டம், அதில் கிடைத்த ஆதாரங்கள் என அனைத்தையும் சொல்ல வேண்டிவரும். எனவே போலிசிடம் செல்வது நல்லதல்ல என்பதைசொல்லி வருண் மறுக்க இருவரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.

ஆறுமணி தொடக்கம் மாற்றி மாற்றி தர்க்கம் செய்து இருவரும் ஓய்ந்திருந்தார்கள். எனினும் முகத்திற்கு முகம் பார்க்காமல் முறுக்கிக்கொண்டே நடமாடினர். எட்டுமணிவரை காத்திருந்தும் விக்ரம் வராமல் போகவும் மறுபடியும் அகிலன் போலிசுக்கு போகவேண்டும் என்று வருணை வற்புறுத்த ஆரம்பித்தான்.

இதற்கு முன்னரும் பலமுறை விக்ரம் சொன்ன நேரத்தைவிட தாமதமாக வந்ததுண்டு. ஆனால் இடையில் ஓரிரு முறையேனும் அழைத்து நிலவரத்தை தெரிவித்து விடுவான். இம்முறை அவனிடம் தொடர்புகொள்ள போன் கிடையாது என்பதால் அவனால் தகவல் தரமுடியவில்லை. விக்ரம் எப்படியும் பாதுகாப்பாக இருப்பான் என்றே வருண் நம்பிக் கொண்டிருந்தான். இப்போது நேரம் செல்லச்செல்ல அகிலன் பயப்படுவது போல நடந்திருக்குமோ என வருணுக்கும் சிறுகலக்கம் உண்டானது.

இருவரும் சேர்ந்து இன்னொரு மணிநேரம் மட்டும் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் விக்ரமிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமென முடிவு செய்தனர்.

கடிகாரம் முட்கள்
ஒன்பதே கால்...
ஒன்பதரை...
ஒன்பதே முக்கால்...
என்று நகர்ந்து கொண்டிருந்தன. விக்ரம் மட்டும் வரவில்லை.

என் பாதையில் உன் கால் தடம் Where stories live. Discover now