~8~

155 11 2
                                    

"சிந்து என்மேல கோபம் இல்லையே?" பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க சில வினாடிகள் யோசிப்பது தாடையில் விரல் வைத்தவள்

"கொஞ்சம் இருந்திச்சுதான். ஆனா இப்ப வர்ற வழியில காணாம போயிடுச்சினு நினைக்கிறேன்" சிந்தியா முறுவலுடன் கூற.

"ரொம்ப sorry சிந்து! எனக்கே என்னை நினைச்சு கோபம். அப்போ உனக்கெப்படி இருந்திருக்கும். என்னோட பெரிய பிரச்சினையே இதுதான். ஒரு சிடுவேஷனை ஹேன்ட்ல்பண்ண, பேஸ்பண்ண தைரியமில்லாட்டி தன்னால ஊமையாகிடுறேன். அன்னைக்கு நீ பேசினது எதுவுமே தவறு கிடையாது. எனக்கு என்னை நினைச்சே வருத்தம். நான் பேசாம இருந்தது உன்னை ரொம்ப hurt பண்ணியிருக்கும். மன்னிச்சிக்க"

"இட்ஸ் ஓகே. என்னயிருந்தாலும் உன் நிலைமைபத்தி எல்லாம் தெரிஞ்ச நானே அப்படி பேசிருக்ககூடாது. நானும் ரொம்ப Sorry ஷாலு!" வாஞ்சையுடன் சிந்தியாவும் தோழியின் கரம் பிடிக்க

"சரி சரி sorry to sorry சரியாப்போச்சு. இப்ப போவமா?"

"சரி சரி வா. உன்னோட ட்ரைவர் நம்மலை சந்தேகமா பார்க்கிறார். சீக்கிரம் ஏறு கிளம்புவோம்"

ஷாலு ஸ்கூட்டரில் ஏறி வசதியாக அமர்ந்துகொண்டே
"அப்படியெல்லாம் நினைக்க மாட்டார். அவர் ஒரு அப்பாவி. ரொம்ப நல்லவர். உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகந்தானா?" என்றவள் பின்னால் திரும்பி அவளை அவ்விடத்துக்கு கூட்டிக்கொண்டு வந்த ஓட்டுனருக்கு கைகாட்டி விடைகொடுத்தாள்.

"அப்ப உன் லிஸ்ட்டுல யார்தான் கெட்டவங்க?"

"லைப்ல கெட்டவங்கனு கட்டாயம் யாரும் இருக்கவே வேணுமா? 'எண்ணமே வாழ்வு'னு ஒரு புத்தகம் வாசிச்சேன். நாம நினைக்கிறது தான் நமக்கு நடக்கும். நல்லதை நினைச்சா நல்லதே நடக்கும். நானும் எல்லாரையும் நல்லவங்கனே நம்புறேன்"

"இதுக்கு மட்டும் நல்லா தத்துவம் பேசு. மத்த விஷியமெல்லாம் விட்ரு"

"சரி நீ ஒழுங்கா ரோட்ட பார்த்து ஓட்டு"

ஸ்கூட்டர் அவ்விடத்தை விட்டு கிளம்பியதை உறுதிசெய்தபின் வழமைபோல போனை எடுத்து இலக்கங்களை தட்டினார் அந்த ஓட்டுனர்.

என் பாதையில் உன் கால் தடம் Where stories live. Discover now