தந்தைக்கு என் முதல் கவிதை!

60 5 5
                                    

ஏழு மலைகள் சூழ
எழுச்சி மிகு வீரனாய்
பாசத்திலும் பண்பிலும்
இவருக்கு நிகர் வேறொருவரில்லை
என்று சொல்ல
பொன்னையா தேவன் பெற்ற
பொன்னான வீரனே!

நிமிர்ந்த நடையும்
செருக்கான பார்வையும் கொண்டிருந்தாலும்
அன்பிற்கு அடிபனிவதில்
உன்னை மிஞ்ச யார் உண்டு?

ஜமீன்தாருக்கு இனையாக
செல்வத்தில் கொளித்து
அயிசுவரியத்தில் வளர்ந்த நீ
தொழிலில் சருகி
ஒவ்வொரு முறை துவண்ட போதிலும்
உனது அழகிய மூன்று முத்துக்களை
பார்த்துப் பார்த்து வீழ்ந்த பொழுதினெல்லாம் எழுவாயே!

நீ பசியுற்றாலும்
என்னை தேவாமிர்தம் அருந்த வைத்து
அழகு பார்பாயே!

உன் பிள்ளை நான்
என்பதை விட
என் தந்தை நீ
என்று ஊர் சொல்லிக் கேட்பதிலே
கர்வம் கொண்டாயே!

செல்வத்தை சம்பாதி
உலகம் உன் பின்னே!
மற்றவர்கள் சொல்வது.
அன்பைச் சம்பாதி
இந்த உலகமே உனக்கு அடிமை!
நீ போதித்தது.

வியர்வைச் சொட்ட சொட்ட
அழைந்து திரிந்து
நீ வறுமையில் வாடி
என் வியர்வைத் துளி
மண்ணில் விழாமல் வளர்த்தாயே!

பெண் பிள்ளைகளை பெற்றெடுத்ததற்காக
முட்டி தேய தேய நீ
குச்சி ஊன்றும் வயதிலும்
குடு குடுவென ஓடி உழைக்கின்றாயே!

உன் வியர்வைத் துளி
மண்ணில் விழாமல் நான்
உனை தாங்கும் காலம் எப்போது?

காலமே விடை அளிக்க வேண்டும்!

எமக்காக நீ உழைத்த காலம்
போதும் அய்யா!
உனது ஆசை படி எம்மை
கரை சேற்றுவிட்டாய்.
இனி எஞ்சிய காலமாவது
உமக்காக நீங்கள் வாழ
ஆரம்பியுங்கள்!

எனக்கு அன்பை மட்டுமே
கொட்டி வளர்த்த உமக்கு நான்
ஏதேனும் கைமாறு செய்ய
நினைக்கிறேன்!
நீண்ட நெடுங்காலம் நீங்கள்
எனது அன்பில் திழைக்க வேண்டுகிறேன்!

கிறுக்கல்கள் Where stories live. Discover now