அவள்!

11 3 1
                                    

தாய்க்கு தாய் அவள்

தந்தைக்கு தோழி அவள்

கணவனின் கைக்குட்டை அவள்

பிள்ளைகளின் பொம்மலாட்டம் அவள்!

மென்மையின் உருவம் அவள்

தன்மையின் சொரூபம் அவள்

பொறுமையின் சிகரம் அவள்

தாய்மையின் அர்த்தம் அவள்!

அன்பின் ஊற்று அவள்

சகிப்பின் உச்சம் அவள்

அழகின் மொத்தம் அவள்!

நிலவின் மொழி அவள்

கர்வத்தின் விழி அவள்

விடியலின் வழி அவள்!

பிரபஞ்சத்தின் புதிரும் அவளே!

கிறுக்கல்கள் Where stories live. Discover now