32🎊

389 22 10
                                    

விடுதிக்கு அருகில் உள்ள பூங்கா‌ ‌, இந்த மாதிரி பேச்சுவார்த்தை நடத்த உகந்த இடமா என்று யோசித்தாள் கலை. அங்கு இருந்த நிலைமை அப்படி. காதலர்கள் தான் வெகுவாக திரண்டு இருந்தனர்.

சொல்லி வைத்தார் போல் அங்கு நுழைந்த தருணும் அதையே சிந்தனை செய்தவாறு உள்ளே நுழைந்தான்.

வார்த்தைகளை தேடும் முன், அவள் அவனை பார்த்து நேர்கோடான ஒரு சிரிப்பை வீசவும், அவனும் பதிலுக்கு தனது புருவங்களை உயர்த்தியவாறு,  புன்னகை செய்தான்.

எங்கு உட்காரலாம்‌ என்று சுற்றி முற்றும் பார்த்தவன், அங்கு இருந்த ஒரு உடைந்த சறுக்கலை காட்டினான். அதன் படிகட்டில் இருவரும் அமர்ந்தனர். கலை மேல் படியிலும், அதிலிருந்து இருண்டு படி இறங்கி அவனுமாக அமர்ந்தனர்.



இருவரும் ஆழ்ந்த அமைத்திக்குள் நுழைந்தனர். நேரம் ஆக ஆக .. கலையே தொடர்ந்தாள்.

"நேத்து நீங்க சொன்னது..."

" தப்பா எடுத்துக்காத கலை..  அப்படியே ஒரு ஃப்லோல சொல்லிட்டேன்‌ அவ்ளோதான். "

"நான் நினைச்சேன் அப்பவே.. எதோ விளையாட்டா தான்‌ பேசிருப்பீங்கன்னு.. " சிறு பதட்டத்துடன் சிரித்தாள்.

"ஏதும் திட்டிருவியோன்னு பயந்துட்டே இருந்தேன். ஒரு வேளை அதை நான் சீரியஸா சொல்லிருந்தா உன் பதில் என்னவா இருக்கும்??" இந்த உறவை முடித்து வைக்க எண்ணி வந்தான் தருண்.
அவனுக்கு நன்றாக தெரிந்தது இது இருவருக்கும் தீங்கை மட்டுமே தரும் என்று. ஆனால் அந்த நிமிடம், அவனால் அவளிடம் அந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை...

"ஹலோ??" தேவைக்கு அதிகமாக அவள் நேரம் எடுத்துக்கொள்ள அவனுக்கு நம்பிக்கை துளிர் விட்டது.

" ஒரு வேளை நீங்க சீரியஸா கேக்குற‌ நாள் வந்தா.. அப்ப பதில் சொல்றேன்.‌ " கலை.

அவனுக்கு உலகம் தலைகீழாக தெரிந்தது.

"மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் சால்வ்டு.. நான் கிளம்பவா??" என்று அவனை தாண்டி படிகளில் இறங்க முயன்றாள்.

இமைWhere stories live. Discover now