13🎊

421 28 8
                                    

"எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... அறிவுக்கோ , சீலனுக்கோ பண்ணாத.. "
கலை கூறிய அறிவுரைகளைக்கேட்டவாறு விடுதிக்குள் தன் கடைசி பையுடன் நுழைந்தாள் தமிழ்‌ .

அன்று இரவே பேருந்து ஏறி சென்னை சென்றாள். மலரின் கடையைத்தேடி கண்டுபிடித்து போவதற்குள் மணி 11 ஆகியது.

"வாங்க மேடம். என்ன பார்க்குறீங்க??" என்று வரவேற்பில் இருந்த பெண் கேட்க..

"மலர்விழி மேடம பார்க்கனும்." என்றவாறு அந்த விஸிட்டிங் கார்டை காட்டினாள். மலரின் இடத்தைக்காட்ட உள்ளே சென்றாள்.

புதுமையான நபரைக்கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றவளைக்கண்டு கலை ஆச்சரியப்பட்டாள்.
உண்மையில்லையே அவனுடைய அக்கா தான் இவர்களா என்று..

"வணக்கம்.. நான் கலையரசி. இரண்டு நாள் முன்னாடி கால் பண்ணிருந்தேனே.. " என்று ஆரம்பித்தாள்.

"ஓ.. தருணுக்கு தெரிஞ்ச பொண்ணா.?? " என்றதற்கு தலையை ஆட்டி வைத்தாள்.

"உங்கள 1ஆம் தேதி தானேமா வர சொல்லியிருந்தேன். ??"மலர்..

"இல்ல மேடம், இங்க ஸ்டே பண்றதுக்கு இடம் எதும் தெரியாது . அதான் கடை எங்க இருக்குன்னு பார்த்திட்டு பக்கத்துல இடம் இருக்கான்னு பார்க்கலாம்னு.. "

"பார்த்து மா. நிறைய பெண்கள் விடுதி இருக்கும். பீ கேர்ஃபுல். "

வேலை பார்க்கும் நேரத்தைப்பற்றி முழுதாக கேட்டறிந்தாள். பின் தன் வேலைப்பாடுகளைக்காட்டினாள். சிபாரிசின் மூலம் சென்றாலும், திறமையில்லையேனில் எங்கும் நிலைக்க முடியாதல்லவா!!??

அவளின் ஆற்றலைப்பார்த்த மலர், பாராட்டினாள்.தருணிடம் தான் வந்ததை கூற வேண்டாம் என்று கூறி இருந்தாள் கலை. சென்னைக்கு அவள் வந்த நினைவுகள் எல்லாமே அவள் மனதில் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது.
-அப்பாவின் கடைசி நிமிடங்கள்.
-லாரியின் கடைசி நிமிடங்கள்..

பெருமூச்சுடன் அந்த கடையை விட்டு வெளியேறும் நேரம்..
விதி விடாத போல என்று நினைத்துக்கொண்டாள்.

இமைWhere stories live. Discover now