28🎊

391 20 4
                                    

இரவு 11 மணி இருக்கும், தருண் வீடு வந்து சேரும் போது. வந்த அலுப்பில், தன் பஞ்சு மெத்தையில் வந்து மோதினான். வலது புறமாக தலையை திருப்பி, ஜன்னல் வழியாக வெளியில் இருந்த தெரு விளக்கைப்பார்த்தான்.

ஆள் அரவமற்ற அந்த இடத்தை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது.‌ தானும் அப்படித்தான் இருக்கின்றோமோ என்ற எண்ணம் தருணிற்கு தோன்றியது.

கலையின் மேல் தான் கொண்டுள்ள காதல்..‌

அன்றிரவு அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்து அறிவின் மேல் அவள் எவ்வளவு மரியாதை, காதல் வைத்துள்ளாள் என்பதை புரிந்து கொண்டான்,கலையின் மேல் பித்து புடித்து திரியும் தருண்..

"ம்ஹும்.. "என்று புன்முறுவலிட்டவாறு, காத்தாடியை நோக்கியவாறு திரும்பினான்.

"எல்லா இடத்துலையும் அவர் தான் இருந்தார். சந்தோஷம், துக்கம்.. அவர் கூடத்தான்.. " என்று கூறியவாறு அழுத கலையை வெறித்துப்பார்த்தான் தருண்.

"நானும் , என் குடும்பமே அவருக்கு முட்டுக்கட்டையா இருப்போம்னு நினைக்கல.. எனக்காக நிறைய நிறைய செஞ்சிருக்கார். "

அறிவு.... அவளது அத்துனை காதலையும் அள்ளிச்சென்ற வல்லலன்...

நீண்ட பெருமூச்சு ஒன்று விட்டபடி உறங்க தயாரானான். !!

"உன் தங்கச்சி இனிமை சின்ன பொண்ணு கிடையாது கலை. உனக்கு அது புரியனும். 19 வயசு ஆகுது. எந்த அளவுக்கு குடும்ப கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கனுமோ அந்த அளவுக்கு அவளுக்கு சுதந்திரமும் கொடுக்கனும். அப்பத்தான் அவளுக்கு வெளி உலகம் புரியும். எத்தன நாள் உன் கண் முன்னாடியே வச்சிருப்ப அவள.. ??? அவள இனிமை கைட் மட்டும் தான் பண்ணனும் கலை" என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் விவரித்தான் தருண்.

காரை விட்டு விடுதி அருகில் வந்து இறங்கும்போது , தருண் சொன்ன வார்த்தைகள் இவை. அவன் வார்த்தகைளில் உண்மை இருப்பதை கலை உணர்ந்தாள். " எத்தனை நாளைக்கு நான் அவ கூட இருக்க முடியும்??? " என்ற உண்மை அவளுக்கு புரிந்தது.

இமைWhere stories live. Discover now