உணர்விலே கலந்தவனே-3

3.5K 63 3
                                    

தன் மேல் மோதியவளை திட்ட எத்தனித்த வேளையில் எதிரில் நின்றவளைக்கண்டு சிலையாய் சமைந்திருந்தான் . தமக்கு எதிரே இமைக்க மறந்த நிலையில் நின்ற ஆடவனை உணரும் நிலையில் கூட அவள் இல்லை . அவனது விழிகளில் பளிச்சிட்டது கோபமா அல்லது ஆச்சரியமா என்பதை அவன் மட்டுமே அறிவான் .

"அச்சோ ஸாரி ..ஸாரி... ஸாரி ஸார்" , என்று கலை அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் கவனக்குறைவே காரணமாய் எண்ணி சிதறிய பொருட்களைக் கண்டு.. சட்டென்று குனிந்து அவனுடையதையும் சேர்த்து சேகரித்திருந்தாள் . அவனுடைய பொருட்களை அவனிடமே கொடுக்க கரங்களை அவன் புறம் நீட்ட அப்பொழுதும் அவனது முகம் காண தயங்கியவளாய் விழிகளை உயர்த்தாமல் கைகளை நோக்கியே இருந்தது அவளது பார்வை . அவனிடம் அசையவில்லை என்பதை உணர்ந்த பின்,

" ஸார் .... ப்ளீஸ்...." என்று இரைஞ்சியவளின் குரல் அவனை என்ன செய்ததோ... தானாக கைகளை நீட்டி பொருட்களைப் பெற்றுக் கொண்டான் . ஒருநொடி கூட தன்னை நிமிர்ந்தும் பாராமல் அவ்விடத்தை விட்டு அகன்றவளின் செயலில் மீண்டும் ஸ்தம்பித்து இருந்தான் . தன்னை களவாடியவளா இவள்....?

விழிமூடி நின்றவனின் விழிகளில் எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்தவளின் தோற்றம் முழுமையாய் நிறைத்தது .

தேகம் மெலிந்து இருக்க...கூந்தல் அடர்த்தி குறைந்திருக்க... கண்களில் சிரிப்பு மறந்திருக்க... என்று அவளது தோற்றத்தில் இருக்கும் பல மாற்றங்கள் கண்டு தாளமுடியாமல் தவித்தது அந்த நெடியவனின் நெஞ்சம் . இவ்வாறு தான் ஏன் எண்ணுகிறோம் என்று இப்போதே உணர்ந்திருந்தான் என்றால் தான் செய்யப் போகும் அனைத்து அனர்த்தங்களையும் தவிர்த்து இருப்பானோ என்னவோ .....

தன்னுள் மூழ்கியிருந்தவனுக்கு அவளின் செயல்களில் அனைத்தும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது . கலை சென்ற திசையை வெறித்தவாறு நின்றிருந்தவனை கலைத்தது உடன் வந்திருந்த நண்பனின் குரல் ,

" என்னடா பண்ணிட்டு இருக்க ..." என்றவனிடம் ,

" ஒண்ணுமில்லை... " என்னும் விதமாக தலை அசைத்தவனை ஆச்சரியம் விலகாமல் ஏறிட்டு...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now