உணர்விலே கலந்தவனே - 41

2.2K 59 6
                                    

பகுதி - 41

இந்தோ... இங்கு வந்து முக்கால் ஆண்டு கடக்க போகிறது.... மகனுக்கு அடுத்த வாரம் பிறந்தநாளும் வந்துவிடும்.... ஆனால் இதுவரை ஒருமுறை கூட நேரில் அவனை பார்க்கவில்லை... அவனும் இங்கு வரவும் இல்லை... எத்தனையோ விடுமுறைகள் வந்திருந்த போதிலும் ஒன்று கீர்த்தி நந்தனுடன் இல்லையேல் பாலா கவிதாவுடன் வெளியூர் பயணம்... அதில் ஒருமுறை வெளிநாட்டு பயணமும் அடங்கியிருந்தது... ஆனால் இங்கு மட்டும் வரவுவதற்கில்லை... தினமும் அலைபேசி வாயிலாக.... அன்னையை பார்த்தால் போதுமென நினைத்துவிட்டான் போலும்... தேவாவிற்கு அன்னையில்லா சுணக்கம் தென்படவேயில்லை.... ஒருவேளை மகன் வாடியிருந்தால்... நிகிலிடம் கெஞ்சியிருப்பாளோ... என்னவோ...

மாற்றங்கள்... பல நடந்தேறியாகியது... இங்குள்ள அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தாலும்... ஏற்றுக் கொள்ள வேண்டியவனோ மாற்றம் என்பதே இல்லாமல் இருந்தான் .
' என்னது மாறவே இல்லையா..' என்று அலறல் விடுத்த மனசாட்சியிடம் என்ன என்பது போல் பார்க்க...

கணவன் அலுவலகத்தில் அவன் செய்யும் அட்டகாசங்களை நினைவுபடித்தியதால் வந்த அலறல்... இப்பொழுது இருக்கும் நிலையில்... மகனது பிறந்தநாளை எண்ணி மறுகுவதா‌... இல்ல... அவன் நடத்தையால் கலங்குவதா... என்ற நிலையில் இருப்பவளுக்கு... இது குறித்து பேசவே அச்சமாக இருந்தது .

தன் நகங்களை கடித்து துப்பியவளாக... கணினி முன்னிருந்தவளை... கலைத்தது... தொலைபேசி... எடுத்து ஹலோ என்றது தான் தாமதம்... வெளிய வா... என்று கர்ஜித்து வைத்துவிட்டான் .

இதோ... அவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க... என்று கலங்கியவள்... பரத்தின் முன் குறுகியே நின்றாள்...

அலுவலகம் வந்து ஒரு மணி நேரம் கூட முழுதாய் கடந்திருந்திருக்காது... வெளிய வா என்ற அழைப்பு...

" என்னாச்சு... கலை..."

" அது..அ.‌து.. வந்து... எனக்கு பர்மிஷன் தரீங்களா... " என்று தயங்கிய படியே கேட்கவும் மணியை திருப்பி பார்த்தவனின் விழிகள் கோபத்தை மட்டுமே தாங்கி நிற்க... தலைகுனிந்து நின்றிருந்தாள் .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now