3

23 2 0
                                    

"கதை சூப்பர். செம 'gangster subject'." என்றான் யுவன் புருவத்தைத் தூக்கி சலங்கையைப் பார்த்த சந்திரமுகி ஜோதிகாவாக.

" 'நாயகன்' அப்படி தான இருக்கும்..." முணுமுணுத்துக்கொண்டேன்.

"நாயகனா? என்ன நாயகன்?"

"இல்ல படத்துக்குக் கதாநாயகன்...?"

"கதாநாயகன்...... யாரு....... உலக நாயகன் வச்சுக்கலாமா?"

"தலையெழுத்து..." தலையில் அடித்துக்கொண்டேன்.

"நல்லா இருக்கு...."

"என்ன நல்லா இருக்கு?"

"படத்துக்கு டைட்டில்.... 'தலையெழுத்து'. கிளைமாக்ஸ் நீ சொல்லவே இல்ல கதைக்கு...?"

"நான் இன்னும் அது யோசிக்கலையே!. சரி டைம் ஆச்சு." என்றேன்.

மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. யுவனின் அறை குப்பைக்கூடமாக இருக்க அதில் எனது டீ டம்ளரும், யுவனின் பூஸ்ட் கப்பும் சேர்ந்து கொண்டது. நான் ஒரு துண்டுசீட்டை எடுத்துக்கொண்டு யுவனை பார்க்க அவனும் தயாரானான். கடிகாரத்தின் மூன்று முட்களும் பன்னிரெண்டை தொட,

"யுவன், கேமரா...?" என்றேன்.

"செக்..."

"டிரைபாடு...?"

"செக்..."

"சேப்டிக்கு கத்தி...?"

"செக்..."

"இறங்குறதுக்கு கயிறு...?"

"செக்..."

"ஏதாவது மறந்திட்டோமா?"

"செக்...!!"

வாய்க்கு வந்தது. (Completed)Donde viven las historias. Descúbrelo ahora