உயிரை கொல்லுதே காதல் ❤️23

1.7K 46 3
                                    

    சாய் கிருஷ்ணா பேசி விட்டு சென்றதும் ஹரியும் அங்கிருந்து சென்று விட்டான்..அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. எனவே அறைக்குள் சென்று அடைந்து கொண்டான் அவன். அவனுக்கு ஊர்மிளா வேண்டும் .அவன் வாழ்க்கை முழுவதும் அவள் வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்..

        ஆனால் அவள் அன்று பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனையே சந்தேகப்பட்டு விட்டாள் என்று அவன் மனம் வருந்தியது. அவளிடம் சென்று பேச அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை ..

     என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டான் அவன் .ஆனால் அவன் ஒன்றை யோசிக்க மறுத்துவிட்டான். இவன் இங்கே எப்படி வேதனைப் படுகிறானோ அதேபோல், அதைவிட இரண்டு மடங்கு அதிகம் ஊர்மிளா வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் மறந்து போய்விட்டது தான் விதி.

இங்கு நிரோஷினி அந்த ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு  இருந்தாள். அவருக்கு கிருஷ்ணாவிற்கு இன்றாவது தான்
பழிவாங்க இதை செய்யவில்லை அவர்கள் இருவரின் காதல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பது இன்றேனும் தெரிந்ததே என்று மகிழ்ச்சி ..அதாவது ஊர்மிளா வைத்தான் ஹரி காதலிக்கிறான் என்பது நிரோஷினிக்கு தெரியாது என்ற விடயம் இன்று ஹரி மூலமாகவே சாய் கிருஷ்ணாவுக்கு தெரிந்தது அவளுக்கு ஏக மகிழ்ச்சி.

    *********************

      ஊர்மிளா நிரோஷினியின் வீட்டிலிருந்து வந்ததில் இருந்தே சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்தாள். ஏன் இப்படி இருக்கிறாய் என அவளது தாய் பலமுறை அவரளிடம் கேட்டும் வாயே திறக்கவில்லை அவள்.

       அவரும் அவள் சொல்லும் போதே சொல்லட்டும் என்று விட்டு விட்டார் ..
ஹரி அன்று அப்படி பேசியதும் அதன் பிறகு நிரோஷினி பேசியது, மேலும் இன்று வரை நிரோஷினி தொலைபேசியில் கூட பேசாதது என எல்லாம் சேர்ந்து அவளை கவலைக்கு உள்ளாக்கியது
என்றே கூறலாம்..

       எனவே மீண்டும் கேரளா செல்லும் முடிவை எடுத்து விட்டாள் ஊர்மிளா. இங்கு ஹோட்டல் சம்பந்தமான வேலைகளை நிரோஷினியே  கவனித்துக் கொள்ளட்டும் என நினைத்தே இந்த முடிவை எடுத்தாள் அவள்.. அதை  நிரோஷினியிடம் கூறலாம் என்றால் அவள் எத்தனை முறை அழைத்தும் நிரோஷினி  அழைப்பை ஏற்கவே இல்லை.


உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now