என் ஆச கருப்பட்டி-15

262 19 1
                                    

"ஆப்போ நீ சொல்ல மாட்ட?" என்று இடுப்பில் இரு கைகளையும் வைத்து விஜய்யை முரைத்தாள் தாரிகா.

"சொல்லுறதுக்கு எதாவது இருந்தா சொல்ல மாட்டோமா!!" என்று விஜய்யும், தாரிகாவை போல, இரு கைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு அவளை பார்த்து சிரித்தான்.

"சிக்காமலா போய்டுவ, அப்போது பார்த்துக்றேன் உன்னைய" என்று ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்வது போல கூறினாள்.

"அதை அப்போ பார்த்துக்கலாம் மேடம், இப்ப போய் வேலைய பாப்போமா!!" என்று பணிவாக கையை வாயருகே கொண்டு வந்து லேசாக குனிந்தபடி கூற,

"அய்யோ!!!" என்று சோகம் ஆனாள் தாரிகா.

"இப்போது என்ன பிரச்சனை!!" என்று பயந்தது போல விஜய் நடிக்க,

"இப்ப தான் நிஜமான பிரச்சனையே" என்று விட்டு தன் அருகே வைத்திருந்த கவரை எடுத்து காட்டினாள்.

"என்னது!! பாம் ஆஆ!!" என்று இரண்டு கையாலும் கவனமாக வாங்கி மெதுவாக பிரித்து பார்த்தான்.

"பாம் கூட பரவாயில்லை" என்று கூறி விட்டு தொப்பென அமர்ந்தாள்.

கவரில் இருந்த யூனிபார்மை குழப்பத்துடன் பார்த்து கொண்டு இருந்த விஜய், "இதுல என்ன பிரச்சனை!!!" என்றான் புரியாமல்.

"என்ன பிரச்சனையா!!! நல்லா விரித்து பாரு"

அவனும் நன்றாக விரித்து பார்க்க அது அந்த ஹோட்டலில் 'வெயிட்ரஸ்' அணியும் ஆடை.

"இப்ப நான் எதை பார்த்து ஷாக் ஆகனும்னு, கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும். ஏன்ன எனக்கு இதுல ஒரு மண்ணும் பிரச்சனை இருக்குறதா தெரியலை".

"தெரியலையா!!!!! நல்லா பாரு மேன்!"

நன்றாக உற்று பார்த்த விஜய், சட்டென்று புரிந்து கொண்டது போல், "ஓஓ!!! அங்கே வால்மீகி கம்பெனியில், நல்ல வேலை பார்த்து கொண்டு இருந்த உன்னை அழைத்து வந்து, இங்கே! இப்படி! 'வெயிட்ரஸ்ஸாக' வேலை பார்க்க சொன்னது தப்பு தான். ஆனால் ஆதி சார் உத்தரவு, மீற முடியாது. சாரி தாரிகா, இதுல என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்றான் சோகமாக.

என் ஆச கருப்பட்டிWhere stories live. Discover now