என் ஆச கருப்பட்டி -32

267 23 21
                                    

நாள் முழுவதும் தாரிகவை வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று கூறிவிட்டனர்.

வேலை பார்க்க தேவையான மடிகண்ணினி, மற்றும் சில டாக்குமெண்ட்ஸ் எடுத்து வந்து கொடுத்து விட்டு சென்றான் ஒருவன்.

அதுபோக, பாரதியும் அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கப்போவதால் தாரிகாவும் அவளுடனே இருக்கவேண்டும் என்று கூறிவிட்டனர்.

கூறியது வேறு யாரும் இல்லை. முகத்தை கடுமையாக வைத்த பாரதியும், அவள் அருகில், முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டிய விஜயும் தான்.

பாரதி இயந்திரம் போல கூறி விட்டுச் செல்ல, விளம்பரதில் வரும் பசுமாடு போல முகத்தை வைத்துக்கொண்டு அவளையே பார்த்து நின்றான் விஜய்.

அவன் தலையில் தட்டி, இழுத்துக்கொண்டு வந்ததும், இப்பொழுது இதை குடுத்துவிட்டு சென்றான் ஒருவன்.

'இந்த வீட்டுல எத்தனை பேரு தங்கி இருகாங்க?' நைட் பகல்னு கூட பார்க்காம ஒரு கூட்டமே உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருப்பதை தான் பார்க்கிறாளே.

தயார் ஆகி கீழே வந்து அந்த ஜோதியில் அவளும் ஐக்கியம் ஆகிவிட்டாள்.

எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை, சாப்பிட வர சொல்லி விஜய் வந்து அழைத்ததும் தான் கணீனியில் இருந்து தலையை நிமிர்த்தினாள்.

"டைம் என்ன?" என்று சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்.

"ம்ம்ம், எல்லாம் லஞ்ச் சாப்பிடற நேரம் தான். வா வா எல்லாரும் நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க" என்று அவளை அவசரப்படுத்தினான்.

"எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்கனு நீ அவசரப்படுற மாறி இல்லையே. எதோ ஒருத்தர்காக ஓடுற மாறியே இருக்கே" என்று அவனை வம்பிழுத்தாள்.

"ஆமா ஆமா, சீக்கிரம் வா!" என்று அவளை தரதரவென இழுக்க,

என் ஆச கருப்பட்டிWhere stories live. Discover now