என் ஆச கருப்பட்டி -33

287 21 25
                                    

தன் முன்னால் இருந்த உணவினை, வாயில் எச்சில் ஒழுக ஆசையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் தாரிகா.

'அடேங்கப்பா, எவ்ளோ ஐட்டம்ஸ். எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்க, இரவு வந்துரும் போலயே!'

சற்று முன்பாக தான், விஜய் வந்தான். அவன் பின்னேயே பலர் கொண்டு வந்து வைத்துவிட்டு போனது தான் இவைகள்.

ஆர்வமாக, தன் முன்னே இருந்த சிக்கன் பிரியாணியை, ஒரு கை எடுத்தவள், வாய் வரை கொண்டுவந்து, பாதியிலே நிறுத்தி, "ஆதி இன்னும் வரலையே!" என்று கேட்டாள் விஜயை பார்த்து.

அவளுக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவன், தன் இரு கைகளையும் கன்னத்தில் வைத்து இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பரவாயில்லையே! ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டியே!" என இரு புருவம் உயர்த்திக் கேட்டான்.

"அதான் இப்போ கேட்டுட்டேன்ல, சொல்லு"

"அவர் எப்போவோ வந்துட்டாரு!" என்று முனுமுனுத்து விட்டு, தயக்கமாக அறையின் வெளியே தெரிந்த காட்டினை பார்த்துக் கூறினான்.

இதற்கு மேல் முடியாது, என்பதை போல, பிரியாணியை வாயில் தள்ளியவள், "என்ன சொன்ன!" என்றாள்.

அவனுக்கு தான் புரியவில்லை, "மா சோம!" என்று தான் அவன் செவிகளுக்கு கேட்டது.

"அட இம்சை. எத்தன தடவை சொல்லிருக்கேன், இப்படி வாய் ல சாப்பாடு வச்சுட்டு பேசாதனு. கேக்கவே மாட்டியா. ஒழுங்கா அதை முழுங்கிட்டு பேசு!" என்று அதட்டினான்.

"உயிம் சாட்டுர்" என்று மீண்டும் எதோ கூறினாள்.

"என்ன!" என்று விஜய் புரியாமல் கேட்க,

வாயில் இருப்பதை விழுங்கி விட்டு, "நீயும் சாப்பிடு!" என்றாள்.

"ஐயோ அம்மா, ரொம்ப தான் கரிசனம். எங்களுக்கு எப்போ சாப்பிடணும் தெரியும். நீங்க முதல ஒழுங்கா பொறுமையா சாப்பிடுங்க. சோறு எங்கையும் ஓடிறாது" என்றுவிட்டு அவனும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டான்.

என் ஆச கருப்பட்டிWhere stories live. Discover now