அத்தியாயம் 4

2K 132 15
                                    

பெண்கள் சக்தியின் மறுவுருவம் தான்.  அவர்கள் மனதால் மிகவும் பலசாலிகள்தான்.  ஆனால் ஓரவஞ்சனை கொண்ட கடவுள் அவளை உடலால் பலகினமானவளாக  படைத்துவிட்டான். அதனால் பலம் கொண்ட ஆண்கள் பெண்களை போகப்பொருளாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.  பொதுவாகவே சிக்கல்கள் தோன்றும் நேரத்தில் உடல் பலத்தால் அல்ல, மூளை பலத்தால்தான் அதில் இருந்து வெளியே வரவேண்டும்.  புத்தியுடன் பிழைக்க வேண்டும். 

மதுஷாலினி போல இப்படி ஒரு ஆணிடம் கையும் களவுமாக பிடிப்பட்டுக்கொண்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் வாய் சவுடார் விட்டு வேலிக்குள் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாகிவிட கூடாது.  

நிதுல்தரேன் பார்த்த பார்வையில் வாயால் வானம் சென்று வருபவள் கொஞ்சம் கூசித்தான் போனாள். ஆனாலும் அடங்குவேனா என்றது அவளது வாய்.  

"நான் உன்னை எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன் தெரியுமா பேபி" என்று இவள் தன் யுக்தியை மாற்றி அவனை அணுக, இவளது பேபியில் அவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்.  ஆனால் அதை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.  

"நான் நல்லவன்னு உங்கிட்ட நான் சொல்லவே இல்லையே பேபி!" என்றான் இவனும் அவளைப்போலவே தலையை ஆட்டி.  

"நீ சொல்லாட்டியும் நீ நல்லவன்னு எனக்கு தெரியும் பேபி.  சும்மா என்னை பயம்காட்ட முயற்சி செய்யாதே!" என்றவளுக்கு சிறிய இடைவெளி விட்டு விட்டு விக்கல் வர தொடங்கியது.  நான்கைந்து விக்கல் வந்த பிறகும் இவன் அசையாமல் இருக்க 

"தண்ணி தாயேன் டெவில்.  விக்கியே நான் சாக போறேன்.  அப்புறம் நீதான் ஜெயிலுக்கு போவ.  ஜெயிலுக்கு போகாட்டியும் நான் பேயா உன் தலைக்கு மேலேயே இருப்பேன்." என்று அவள் கூற இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது ஒரு செகன்டில் தான் 'டெவிலாகி' போனதில்.  

எழுந்து போய் வாட்டர் பாட்டிலை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.  அவள் வாயை வைத்து குடிக்க போக 

"ஆஆ சொல்லு" என்றான்.  

"க்கும்" என்றவள் வாயை அண்ணார்ந்து திறக்க இவன் மடமடவென்று தண்ணீரை ஊற்றினான்.  அவன் ஊற்றிய வேகத்தில் அவளுக்கு பாதி தண்ணீர் வெளியே கொட்டி அவள் போட்டிருந்த உடை மேலே நனைய தொடங்கியது.  உடனே இவன் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு 

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now