அத்தியாயம் - 10

1.5K 101 4
                                    

ஹோட்டலில் வயிறு புடைக்க தின்றுவிட்டு மதுஷாலினியை ஹாஸ்டலில் கொண்டு விட்டுவிட்டு போனான் நவீன்.  

மறுநாளும் நேற்றைய தினத்தின் தாக்கம் போகாமல் படுக்கையே கதியென்று இவள் படுத்திருக்க அவள் கவனத்திற்கு வராமல் போனது அந்த செய்தி.  

அங்கே ஆபிஸில் "சார் நெக்ஸ்ட் சாக்ஷி மேடம் எப்போ வருவாங்க? அடுத்த மீடிங்கில் பைனல் பண்ணிடலாமா?" என்று நவீன் கேட்க 

"மீட்டிங் நேற்றோட முடிஞ்சிடிச்சு! இனி அந்த பெண்னை பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது." என்று நிதுல்தரேன் கூற 

"ஆனா சார் மீட்டிங் நல்லாத்தானே போய்ட்டு இருந்தது.  நாம டிமான்ட் பண்ணிய எல்லாத்துக்கும் அந்த மேடம் சம்மதிச்சாங்களே!" என்று நவீன் அதிர்ச்சியுடன் கேட்க 

"ஆனா அவங்க  டிமான்ட்க்கு என்னால் சம்மதிக்க முடியாது!" என்றான் இவன்.

"புரியல சார்" என்று நவீன் கேட்க 

"அந்த பெண்ணோட பிஹேவியர் எனக்கு பிடிக்கல.  இந்த டீல் முடிஞ்சா அப்புறம் இந்த மாதிரி தொடர்ந்துட்டுத்தான் இருக்கும்." என்று நிதுல்தரேன் கூற 

"அது மட்டும்தான் காரணமா?" என்று கேட்டான் நவீன்.  

"இல்ல, அவளுக்கு ஆரம்பத்திலேயே தெரிஞ்சிருக்கும் எதிரே இருப்பவளுக்கு அவளின் செய்கை பிடிக்கலன்னு.  ஆனால் அதை கொஞ்சமும் கண்டுக்காம அவளை அவ அழ வச்சிருக்க கூடாது.  அதனால் எனக்கு இந்த டீல் பிடிக்கல." என்றான் நிதுல்தரேன் வெளிப்படையாக.

"அப்படின்னா ஷாலுவை சாக்ஷி அழ வச்சதாலத்தான் இந்த டீலை நீங்க ஏத்துக்கல இல்லையா!" என்று நவீன் விளக்கமாக கேட்க 

"எஸ்" என்றான் நிதுல்தரேன்.

"இதை நான் எப்படி எடுத்துக்கணும்?" என்று நவீன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்த நிதுல்தரேன்

"கண்டிப்பா உன் மனசில் உள்ளது போல எடுத்துக்க கூடாது. என் அண்ணனுக்கு பிறகு நான் மறந்தும் கூட சிரிக்காதவன்.  அப்படி இருந்த என்னை அந்த பொண்ணு என்னை அறியாமலேயே சில நேரம் சிரிக்க வச்சிருக்கா! அதுக்காக நான் கொடுக்கும் ஒரு சின்ன மரியாதை! அவளை யாராச்சும் கஷ்டப்படுத்த நினைச்சா அது யாரா இருந்தாலும், என்னவா இருந்தாலும் எனக்கு வேண்டாம்.  அவ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்.  சிரிப்பை இழந்த எனக்கு மட்டுமே தெரியும் அதன் அருமை.  நல்ல பொண்ணு." என்றான் நிதுல்தரேன்.  

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now