அத்தியாயம் - 27

2K 104 12
                                    

"பேபி...பேபீஈ" என்று லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டிருப்பவனை பக்கத்தில் இருந்து சுரண்டிக்கொண்டு இருந்தாள் மதுஷாலினி.  அவன் பதில்சொல்லாமல் தன் வேலையில் கவனமாக இருந்தான். அவனை கூப்பிட்டுப்பார்த்து சலித்து போனவள் கோபத்துடன் அவன் மடியில் இருந்த லேப்டாட்டை பிடுங்கி வேறு இடத்தில் வைத்துவிட்டு அவன் முன்னே வந்து நின்று கோபத்துடன் முறைத்தப்படி இடுப்பில் கையைவைத்துக்கொண்டு நின்றாள்.  கோபத்தில் பெரிதாக மூச்சை அவள் இழுத்துவிட அதன் பிரதிபலிப்பு வெளியே தெரிந்தது.  

எதுவுமே சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவன் நின்ற கோலம் கண்டு பார்வையை கழுத்துக்கு கீழேயே நிறுத்திக்கொண்டான். ஒரு நிமிடத்திற்கு மேலாக இது நடந்துக்கொண்டிருக்க ஆரம்பத்தில் அவள் அதை கவனிக்கவில்லை.  பிறகு மெல்ல அவன் பார்வை போன திசையை பார்த்தவள் 

"யூ டெவில்" என்றாள் கையால் மார்பை மூடிக்கொண்டு பல்லை கடித்தப்படி. 

"இப்போ எதுக்கு இப்படி குதிக்குற?" என்று அவன் பார்வையை அங்கே இருந்து அகற்றாமல் கேட்க 

"முகத்தை பார்த்து பேசு பக்கி" என்று இவள் அவன் உச்சி முடியை பிடித்து நிமிர்த்தினாள்.  அவள் கையை வேகமாக தட்டிவிட்டவன் 

"நான் என்ன ரோட்டுல போறவனா வருஷ கணக்கில் முகத்தையே பார்த்து பேச.  சும்மா இருந்தவனை கிளப்பிவிட்டது நீதான்.  லவ்வு லவ்வுன்னு பின்னாடி திரிஞ்ச.  அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம், முடிஞ்ச அளவு குடும்பம் நடத்திட்டு ஒன்னாவே செத்து போகலாமுன்னு கலர் கலரா ஆசையை காட்டிட்டு இப்போ நான் கொஞ்சம் கொஞ்சம் சாகுறதை ரொம்ப கூலா நின்று வேடிக்கை பார்த்துட்டு இருக்க." என்று அவன் கோபத்தில் பொரிய 

"உங்களுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு கோபம் வருது.  சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்க வேண்டாமா? நாம என்ன சிக்ஸ்டீன் ப்ளஸ்ஸா" என்று அவள் கேட்க 

"என்னத்தை புரிஞ்சு நடந்துக்க சொல்ற? உன்னை விட எனக்கு அவங்க மேலே பாசமும், அக்கறையும் நிறையவே இருக்கு.  அதுக்காக இப்படி காட்டுக்கும், வீட்டுக்கும் இழுத்துட்டு இருக்க சொல்றியா? இருக்கிறவ சும்மா இருந்தா கூட பரவாயில்லை.  உன் அட்டுழியம் எல்லை மீறிட்டு இருக்கு இப்போல்லாம். இப்போ உன்னை நான் இங்கே கூப்பிட்டேனா? மணி என்னன்னு பார்த்தியா? மணி இராத்திரி ஒன்பது தாண்டி போகுது.  இவ்வளவு நேரம் ஊரை சுற்றி வந்திருக்க பூலாந்தேவி மாதிரி.  அதை முடிச்சவ அப்படியே உன் வீட்டுக்கு போக வேண்டியதுதானே! இப்போ எதுக்காக இங்கே வந்து என் உயிரை வாங்கிட்டு இருக்க?" என்று இவன் காச் மூச் என்று கத்த 

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now