நேர்காணல்

45 0 0
                                    

இது முற்றிலும் ஒரு கற்பனை கதை

பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் உள்ள உதகை மாவட்டத்தில் அமுதன் என்னும் ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஓர் எழுத்தாளன். அவன் பல நூல்களை எழுதியிருந்தாலும், அவனின் ஒரு நூல் இந்தியாவின் பார்வையை அவன் மேலீர்த்தது. அந்நூலின் பெயர் "இறைவனின் இதயம்".


இந்நூலைப் பற்றி அமுதனிடம் உரையாடுவதற்காக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அவனை நேர்காணலூக்காக அழைத்திருந்தனர். அமுதனும் அத்தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்றான். அங்கிருந்த அனைவரும் அமுதனை வரவேற்றனர். சிறிது நேரத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.நேர்காணல் செய்பவர் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

"ஒரு நூலால் உங்களின் பெயர் இந்தியா முழுதும் ஒலிக்கிறது. இத்தகையச் சிறப்புமிக்க நூலை படித்து பிடிக்காமல் போனவர்கள் யாரும் இல்லை. ஆனால் சிலரால் இக்கதையைப் படிக்க இயலவில்லை. ஆகையால் நீங்கள் இப்பொழுது கதையைக் கூறினால் நன்றாக இருக்கும்". என்றார் நேர்காணல் செய்பவர்.

"வணக்கம்! என் பெயர் அமுதன்'' என கூறினான். அவன் நேர்காணல் செய்பவரை பார்த்து "நீங்கள் என்னோடு பேசும்போது, நான் எழுதியது கதை என்று சொன்னீர்கள். அது தவறு நான் எழுதியது வெறும் கட்டுக்கதை அல்ல அது ஒரு மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வாகும். சரி அதை விடுங்கள்." என கூறியவாரு அமுதன் அவன் நூலில் எழுதிய வரலாற்று நிகழ்வை கூறத்தொடங்கினான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அனந்தவர்மன் என்னும் மன்னன் ஒரு தீவிரமான வைஷ்ணவர். ஒரு நாள் கிருஷ்ணர் அவர் கனவில் அவதரித்து "என்னுடைய இருதயம் ஓர் ஓடையில் உன்னிடம் வருகிறது. அது ஒரு மரக்கட்டை மேல் இருக்கும். நீ எனக்காக ஒரு கோவில் அமைத்து அந்த மரக்கட்டையில் சிலை வடித்து என் இதயத்தை அதற்குள் வைத்துவிடு." என்று கூறினார்.

இறக்கா இருதயம்Kde žijí příběhy. Začni objevovat