அம்பிதயம்

23 0 0
                                    

முதல் பாகத்தில் ஆதித்தனும் அங்கயர்கன்னியும் சாலையில் பேசிக்கொண்டிருந்தனர் என்று கூறினான் அமுதன். இப்போது அந்த நேர்காணலின் இடைவெளில் அமுதனும் நேர்காணல் செய்பவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்போம்.

"உங்கள் பெயர் என்னனு சொல்லுங்கள்ளேன்? சொன்னால் நமக்குள் நல்ல புரிதலேற்படுமல்லவா? சொல்ல விரும்பாவிட்டால் சொல்லவேண்லாம். சொன்னால் பெரிதாக ஒன்னும் நடந்துவிடாது, சொன்னால் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருன்சோழன் போல் வாழ்க்கையில் எங்கிருந்தோ பேசிக்கொள்ளலாம் அல்லவா?" " என்று சிறுதயகத்தோடு கூறினான் அமுதன்.

"ப்பா! பெயரைக் கேட்பதுக்கு இத்தனை வசனங்களா! உங்கள் கவித்திறனை இங்கே காட்டி என்னை மயக்க வேண்டாம். ஏற்கனவே, கவித்திறனைக் கண்டு வியந்துதான் நான் உங்களை நேர்காணல் செய்யவே ஒப்புக்கொண்டேன். சரி! என் பெயர் பார்வதி. ஆனால் அதை சுருக்கி 'பாரு' என்று அழைக்கிறார்கள். நீங்களும் அப்படியே அழைக்கலாம். என்றாள் நேர்காணல் செய்பவர்.

"அது சரி! சில பெண்கள் இந்த வசனங்களுக்கு கூட அவர் பெயர்களை சொல்லமாட்டார்கள்."

"ஆ! உங்களை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. பெயர் சொல்ல எதற்காக யோசிக்க வேண்டும்".

"அது மட்டும் வேண்டாம். இந்த உலகத்தில் உள்ள பலருக்கு என்மீது கோபமும் போராமையும் உள்ளது."

"நான் சொல்கிறேன்! உங்களை கண்டு பலரும் மயங்கிவிட்டார்கள். உங்கள் அழகைக் கண்டு மயங்காதவர்கள் கூட நீங்கள் எழுதும் கவிதை மற்றும் கதைகளில் மயங்கிவிடுவார்கள்." என்று கூறிவிட்டு இருவரும் சிரித்தனர்.

உடனே "சிரித்ததுப் போது நிகழ்சியைத் தொடரவேண்டாம இருவரும் வந்து நாற்காலியில் உட்காருங்கள்." என்று குறும்பாக நேர்காணலின் இயக்குநர் கூறினார்.

இறக்கா இருதயம்Where stories live. Discover now