பயணம் முடிந்தது

9 0 0
                                    

இரண்டாம் பாகத்தில் ஆதித்தன் மாளிகையிள்ள அறையில் நுழைந்தான். அவ்வறையின் சாவியின் மூலம் அந்த கல்லை உடைத்தான். அவன் முகத்தை அச்சம் ஆட்கொண்டது.

ஆதித்தன் அந்த கல்லை சாவியைக் கொண்டு உடைத்ததான் சாவியும் அதனோடு சேர்ந்து உடைந்தது. அந்த கல்லிற்குள் ஓர் ஓலை இருந்தது. இதை கண்டு அவனின் முகம் அச்சத்தில் வீழ்ந்தது.

ஆதித்தன் சிறு தயக்கத்தோடு அதை கையில் எடுத்தான்; அதை விரித்து பார்த்தான்; அதில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு செல்வதற்கான வழியும் இருந்தது. அது ஒரு வரைபடம் போல் காட்சியளித்தது. ஆதித்தன் ஓலையையும் அம்பிதயத்தையும் எடுத்துக் கொண்டு மாளிகையைவிட்டு வெளியேறினான்.

மறு நாள், ஆதித்தன் அங்கயர்கன்னி வீட்டிற்கு சென்று முன் தினம் நடந்தவற்றை கூறினான். அதையெல்லாம் நீ நேரில் கண்டாயா? என்று கேட்டாள் அங்கயர்கன்னி.

ஆம்! ஏன்? என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என்றான் ஆதித்தன்.

உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இதை என்னால் நம்ப முடியவில்லை. நீ என்னை அந்த மாளிகைக்குள் கூட்டிச் செல். அப்போது நான் அதை நம்புகிறேன்.

ஐயோ! நான் சொன்னதை நீ கேட்கவில்லையா? நான் என்ன சொன்னேன்? நான் அந்த கல்லை சாவியைக் கொண்டு உடைத்தேன் அப்போது அந்த கல்லுடன் சாவியும் உடைந்துவிட்டது. இப்பொது அந்த கதவு மூடியிருக்கும் அதை திறக்க சாவி வேண்டும். அந்த சாவி உடைந்துப்போய் அறையின் உள்ளே கிடக்கிறது. இதையெல்லாம் நான் முன்பே சொன்னேனே! நீ இதற்கு செவி சாய்க்கவில்லையோ?

இல்லை! நான் அதை கேட்டேன். ஆனால் சாவி அறைக்குள் கிடப்பதை நீ சொல்லவில்லை. நான் சாவி உன்னிடம் இருக்கிறது என்று நினைத்தேன். கோபப்படாதே!

சீச்சீ! இதில் கோபப்படுவதற்கு என்ன உள்ளது. உன் சந்தேகத்தை நீ கேட்டாய். அவ்வளவுத் தான்! நான் இங்கு வந்ததற்கானக் காரணம் என்னவேன்று சொல்ல மறந்துவிட்டேன். சொல்கிறேன் கேள்! நான் இன்று மாலை அந்த வரைபடத்தில் இருந்த இடத்தைத் தேடி புறப்படுகிறேன். நீ உன் அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு குதிரை மட்டும் வாங்கித்தா.

இறக்கா இருதயம்Where stories live. Discover now