நினைத்தாலே இனிக்கும்...

124 5 2
                                    

அழகான காலை வேளையில் கதிரவன் தன் கொடையான கதிர்களை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்தான். இரை தேடும் பறவைகளாக மக்கள் தத்தமது பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது அந்த கல்லூரி.  புகழ்பெற்ற கலைக் கல்லூரி அந்த கல்லூரியில் சேர்வதற்காக தன் தந்தையுடன் வந்திருந்தாள் மகாலட்சுமி. அட்மிசன் கிடைத்து கல்லூரி விடுதியில் மகளை விட்டு விட்டு ஆயிரம் புத்திமதிகள் கூறி விட்டு சென்றார் அவளது தந்தை விஜயராகவன்.

கல்லூரி விடுதி அவளுக்கு புதிது. பிறந்ததில் இருந்து தாய், தந்தையரை விட்டு பிரிந்து ஒருநாளும் அவள் இருந்ததில்லை. அவளது உலகமே அவளது வீடு, அவளது கிராமம், அவள் தந்தையின் வயல்வெளிகள் என்று இயற்கையோடு விளையாடி சுற்றித் திரிந்த மங்கை அவளை சிட்டியில் இருக்கும் இந்த கல்லூரியில் சேர்த்து விட்டு அவர்  ஊருக்கு சென்று விட்டார்.

மகாலட்சுமிக்கு விடுதியில் தங்குவது புதிது அவளது அறைக்கு புதிதாக ஒரு பெண் வந்தாள். அவளது தந்தையும் அவளுக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி விட்டுச் சென்றார்.

மகாலட்சுமியைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தவள் தன் பெயர் அர்ச்சனா என்றிட அவளிடம் சினேகமாக புன்னகைத்து விட்டு மகாலட்சுமி என்றாள்.

அர்ச்சனா அவளை மகா நீ எந்த டிபார்ட்மென்ட் என்றிட கம்யூட்டர்சயின்ஸ் என்றாள் மகா. வாவ் சூப்பர்டி நானும் அதே டிப்பார்ட்மென்ட் தான் என்ற அர்ச்சனா என்ன மகா எடுத்த எடுப்பிலே டி போட்டு பேசுறேனு பார்க்கிறியா. நான் அப்படித்தான் இனிமேல் நாம இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் என்றாள்.

ஆமாம் உனக்கு இந்த ஹாஸ்டல் லைப் புதுசா என்ற அர்ச்சனாவிடம் எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள் மகா. மகா திரும்பவும் சொல்றேன் நாம ப்ரண்ட்ஸ் அந்த போங்க வாங்கலாம் வேண்டாம் போடி, வாடினே பேசு என்றிட சரிடி என்றாள் மகாலட்சுமி. அது ஒன்றும் இல்லை பேபி உன்னை பார்த்தாலே தெரியுது நீ ஹாஸ்டலுக்கு பர்ஸ்ட் டைம்னு நான் பள்ளிக்கூடம் சேர்ந்த நாளில் இருந்து ஹாஸ்டல் தான். அப்பா, அம்மா இரண்டுபேரும் வேலைக்கு போறாங்க என்னை பாத்துக்க முடியாதுனு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாங்க என்ற அர்ச்சனா எனக்கு பசிக்குது வா போயி சாப்புடலாம் என்று மகாலட்சுமியை உணவுமேஜைக்கு அழைத்துச் சென்றாள்.

நினைத்தாலே இனிக்கும்...Onde histórias criam vida. Descubra agora