நினைத்தாலே இனிக்கும்...

43 3 2
                                    

அன்று மாலை கல்லூரி விடுதியில் சோகமாக அமர்ந்திருந்த மகாவின் அருகில் வந்தனர் அர்ச்சனா, ரம்யா இருவரும். என்னாச்சு மகா ஏன் டல்லா இருக்க என்ற தோழிகளிடம் அம்மா, அப்பா ஞாபகம் என்றவளின் கண்கள் கலங்கியது. என்னடி வீட்டை ரொம்ப மிஸ் பண்றியா என்ற அர்ச்சனாவிடம் ஆமாம்டி ரொம்பவே எங்க வீட்டில் நான் தான் ரொம்ப செல்லம். எங்க வீட்டில் ஒரே ஒரு பொண்ணு அதனால செல்லம் ஜாஸ்தி. பெரியப்பாக்கும் இரண்டு பசங்க எங்க அப்பா அம்மாக்கு நான் ஒரே பொண்ணு அதனால நான் ரொம்ப செல்லம் என்றாள். அண்ணன்களோட எப்பவும் சண்டை பிடிச்சு , விளையாடிகிட்டே இருப்பேன். இங்கே தனியா இருக்கிறது ஏதோ போல இருக்கு என்றாள் மகா.

உங்க வீட்டில் எப்பவுமே சிரிச்சுட்டே இருப்பியா மகா. எப்பவுமே உன்னைச் சுத்தி ஆட்கள் நிறைஞ்சுருப்பாங்களா மகா என்ற அர்ச்சனாவிடம் ஆமாம் என்றாள் மகா. நீ ரொம்ப லக்கிடி என்ற அர்ச்சனாவின் கண்கள் கலங்குவதைக் கண்ட மகா என்னாச்சு அர்ச்சனா என்றாள். எங்க வீட்டில் நான் இருக்கேனானு கூட தெரிஞ்சுக்க ஆள் இல்லை என்றாள். என்ன சொல்ற அர்ச்சனா உன் அம்மா, அப்பா என்றவளிடம் இருக்காங்க அம்மா, அப்பா அவங்களோட ஒரே குறிக்கோள் பணம் மட்டும் தான். இரண்டுபேருமே சம்பாதிக்கிறாங்க என்னோட எதிர்காலத்துக்காக ஆனால் என்னோட நிகழ்காலத்தில் அவங்களோட அன்பு கிடைக்காமல் எவ்வளவு ஏங்கிப் போயிருக்கேன் தெரியுமா . ஐந்து வயசுல இருந்து ஹாஸ்டல் கொடுமைடி எலலோரும் சொல்லுவாங்க ஈஷியா எல்லோர்கிட்டையும் ஒட்டிக்குவேன்னு அதற்கு காரணம் யாராவது நம்ம மேல பாசம் காட்ட மாட்டாங்களா, அன்பா அக்கரையா இருக்க மாட்டாங்களாங்கிற ஏக்கம் தான் என்று அர்ச்சனா அழுதிட அவளது கண்ணீரைத் துடைத்த மகா . அர்ச்சனா என்ன இது குழந்தை மாதிரி அழாதடி உனக்கு நான் இல்லையா என் வாழ்க்கை முழுக்க உன்கூட உன் மேல உண்மையான அன்பு காட்ட நான் இருக்கேன்டி என்றிட அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். நானும் இருக்கேன்டி என்று ரம்யா கூற மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

நினைத்தாலே இனிக்கும்...Where stories live. Discover now