நினைத்தாலே இனிக்கும்...

28 2 10
                                    

என்னடி நீங்க இரண்டு பேரும் கிளம்பலையா என்ற அர்ச்சனாவிடம் அவசியம் போகனுமா அர்ச்சு என்றாள் மகா. என்னடி இப்படி கேட்கிற நாளைக்கு பங்க்சன் அப்போ நாம மூன்று பேரும் ஒரே மாதிரி காஸ்டியூம்ஸ் போட்டுக்கலாம்னு மூன்று பேரும் சேர்ந்து தானே முடிவு பண்ணினோம். அப்போ எல்லாம் சரினு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றிங்க என்றாள் அர்ச்சனா.

அது இல்லப்பா இப்போ தான் ஹாஸ்டல் செட் ஆகிருக்கு அப்பா கொடுத்த பணம் இந்த மந்த் என்ட் வரைக்கும் வேண்டும். என் சித்தி காரி அடுத்த மாதம் பணம் எவ்வளவு தருவானு வேற தெரியலை அதான்பா என்று இழுத்தாள் ரம்யா. பணம் ஒரு விசயமாடி என்னோட பணமா இருந்தால் என்ன உன் பணமா இருந்தால் என்ன என்ற அர்ச்சனாவிடம் இல்லை அர்ச்சு அப்படி இல்லை என்ற ரம்யா ஏதோ கூற வர ஏன் ரம்யா நாம மூன்று பேரும் ப்ரண்ட்ஸ் மட்டும் இல்லை அதுக்கும் மேல எனக்கு சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல் பழகிருந்தால் கூட உங்க இரண்டு பேருகிட்ட இருக்கிற நெருக்கம் வேற எந்த ப்ரண்ட்ஸ் கிட்டையும் கிடைச்சது இல்லைடி என்றாள் அர்ச்சனா.

அர்ச்சு அது வந்து என்ற ரம்யாவிடம் ரம்யா ப்ளீஸ் நாம போகலாம். பணம் ஒன்றும் பெரிசா செலவாகாமல் ஒரு பட்ஜட் போட்டு பார்த்துக்குவோம் என்று மகா கூறிட சரி அர்ச்சு போகலாம் என்றாள் ரம்யா. மூவரும் ஒன்றாக கிளம்பினர்.

பர்ஸ்ட் எங்க வீட்டுக்கு போகலாம்டி போயி பைக் இல்லைனா கார் எடுத்துட்டு போகலாம் என்று அர்ச்சனா கூறவும் ரம்யா, மகா இருவரும் சரியென்று கூறினர். அது போல் மூவரும் அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்றனர். அவளது அம்மா, அப்பா இருவரும் ஏதோ ஒரு மீட்டிங்கிற்கு சென்று விட்டதாக வேலை பார்க்கும் பெண் கூறிட சரியென்ற அர்ச்சனா தனது காரை எடுத்துக் கொண்டு தோழிகளுடன் புறப்பட்டாள்.

உனக்கு டிரைவிங் தெரியுமா அர்ச்சு என்ற மகாவிடம் எல்லாம் தெரியும் லைசன்ஸ் இருக்கு என்றவள் வண்டியை ஓட்டினாள். என்ன ரம்யா இன்னும் என்னடி யோசனை என்றாள் அர்ச்சனா. எதாச்சும் பார்ட்டைம் வேலைக்கு ட்ரை பண்ணலாமானு யோசிக்கிறேன் என்றாள் ரம்யா. பார்ட்டைம் ஜாப் என்னடி நீ உளறிட்டு இருக்க நமக்கு காலேஜ் குளோஸிங் டைம் நான்கு மணி அப்பறம் நீ வேலைக்கு போயிட்டு ஆறரை மணிக்கு உள்ளே ஹாஸ்டலுக்கு வந்திர முடியுமா. எதாவது லாஜிக்கோட பேசுடி என்ற அர்ச்சனா அந்த மாலின் முன் வண்டியை நிறுத்தினாள்.

நினைத்தாலே இனிக்கும்...Where stories live. Discover now