நினைத்தாலே இனிக்கும்...

41 3 2
                                    

ஐவரும் ஒன்றாக தங்களின் வகுப்பறைக்குச் சென்றனர். செல்லும் வழியில் இன்றும் மகாவை அந்த கூட்டம் அழைக்க அந்த கூட்டத்தில் இருந்த சீனியர் மாணவன் கமல் தன் சகாக்களை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு நீ கிளம்பு என்றான். அவளும் அமைதியாக சென்று விட்டாள்.

என்னடா இது எதற்காக இவளை போகச் சொன்ன என்ற தோழி ஒருத்தியிடம் சும்மா தான் என்றவன் எழுந்து சென்று விட்டான். என்னாச்சு இவனுக்கு என்ற சகாக்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதோ பேசி விட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

மதனின் முகம் சிவந்து கன்றி இருப்பதைக் கண்ட மகா என்னாச்சு உங்க முகம் கன்றிப் போயி இருக்கு என்றிட அப்பொழுது தான் அவனைக் கவனித்த அர்ச்சனா,ரம்யா இருவரும் அதை கேட்டிட ஒன்றும் இல்லை நேற்று ஹாஸ்டலில் சீனியர் கூட ஏதா வம்பு வளர்த்து மல்லுக்கட்டி உருண்டுருக்கான் என்று கார்த்திக் கூறிட என்ன விசயம் என்றாள் மகா. சொல்ல மாட்டேன்கிறான் மகா என்ற கார்த்திக் சரி வாங்க என்று வகுப்பறைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டனர்.

மற்ற மாணவர்களும் வந்து சேர்ந்தனர். வகுப்பு ஆரம்பித்தது. வகுப்புகள் நன்றாக சென்றது. நண்பர்கள் ஐவரும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பாடத்தை கவனித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தனர். கமல் அந்த வகுப்பின் ஜன்னல் வழியே அவளை பார்த்து விட்டு சென்று விட்டான்.

என்னாச்சு மச்சான் என்ற தோழன் சந்துருவிடம் நேற்று ஹாஸ்டலில் நடந்த சண்டையைப் பற்றி கூறினான். சரி இப்போ என்ன பண்ண போற என்ற தோழனிடம் ஒன்றும் பண்ண போறதில்லை. ஆனால் அவனோட மூஞ்சியை கண்டிப்பா உடைக்காமல் விட மாட்டேன் என்ற கமல் வெல்கம் பார்ட்டிக்கான ஏற்பாடுகளை பார்க்கலாம் வாங்க என்று நண்பர்களுடன் கிளம்பி விட்டான் கமல்.

அன்றைய வகுப்புகள் நன்றாகவே கடந்த்து. ஐவரும் தங்கள் குடும்பம் பற்றி பேச ஆரம்பித்தனர். மகா உங்க ஊருக்கு கண்டிப்பா வரணும் போல இருக்கு என்ற கார்த்திக்கிடம் கண்டிப்பா வாங்க என்றாள். மகா ஒரு விசயம் சொல்லு என்னை பார்த்தால் என்ன வயசான ஆள் மாதிரி தெரியுதா என்றான் கார்த்திக். இல்லையே ஏன் என்றவளிடம் பின்ன நீ வாங்க , போங்கனு கூப்பிடுறதைப் பார்த்தால் எனக்கே அப்படித் தான்மா பீல் ஆகுது என்றவனைப் பார்த்து சிரித்தாள் மகாலட்சுமி. என்னை நீ போடா வாடானே கூப்பிடலாம் என்றவனிடம் சரிடா என்றாள் மகாலட்சுமி.

நினைத்தாலே இனிக்கும்...जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें