வீட்டினுள் பார்த்திபன் நுழையும் பொழுதே தன்னுடைய காலை கட்டிக்கொண்டாள் பார்த்திபன் மகள்.
"ப்பா ப்பா தூக்கு தூக்கு" இரு கைகளையும் நீட்டி தலையை தலையை ஆட்ட சோர்வு துறந்து மகளின் அடிமை ஆனான் தந்தை.
அழகு பொக்கிஷத்தை கைகளில் அள்ளி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், "என்னடா அதிசயம். இன்னைக்கு என் பொண்ணுக்கு சித்தப்பாவை தாண்டி நான் தெரியுறேன்" வசந்தை பார்த்தபடியே அவன் அருகில் பார்த்திபன் அமர்ந்தான்.
"என்னனு தெரியல டா.. இன்னைக்கு உன்ன தான் தேடிட்டே இருந்தா குட்டி" மகளை பார்த்தவன், "அப்டியாடா" என்ற கேள்வியோடு தன்னுடைய பையிலிருந்து ஒரு கவரை சகோதரன் முன்பு வைத்தான்.
"ஒரு வரன் வந்துச்சு வசந்த். பாரு, அம்மா அப்பாகிட்டயும் காட்டு. நான் வந்து விவரம் சொல்றேன். புடிச்சா மேல பேசலாம்"
தகவலை கொடுத்து சமையலறை பார்த்தவன் மனைவி அங்கில்லாமல் போக குழந்தையை தூக்கி அறைக்குள் சென்றுவிட்டான்.
அறைக்குள் நுழையும் பொழுதே தடதடக்க ஓடி வந்த பூர்வி அன்னை கையில் டேப் (Tab) இருப்பதை பார்த்து உற்சாகத்தில் ஆரபியை நோக்கி வேகமாக ஓடினாள்.
"டேய் பாத்து மெதுவா" தகப்பன் பேசி முடிக்கும் முன்பே குழந்தை அன்னையின் மடியில் இருந்தாள்.
"ஏன்டி மா... நான் வேலை பாக்க ஆரமிச்சா போதும் ஒடனே வந்துடுவியே நீ" செல்ல சலிப்போடு தான் செய்த வேலையை கணவனிடம் காட்டினாள்.
மகளோ தந்தையிடம் காட்ட விடாமல் தன் பக்கம் இழுத்து, "ம்மா லைத் லைத்.." என்றாள்.
"ஓ லைட் போடலையா நான்" என்றபடியே அங்கு தீட்டப்பட்டிருந்த டிசைனுக்கு விளக்கொளி கொடுத்து, "இப்ப ஓகேவா?" கேட்க,
மகள் அருமை என்னும் விதமாய் சைகை செய்து அன்னையை பார்த்து சிரிக்க, மக்களது கன்னத்தில் அழுத்தமாய் அதரம் பதித்து கணவனிடம் பெருமையாக,