மாப்பிளை

10 2 4
                                    

தன்னை சுற்றிலும் விதவிதமான மாய விலங்குகள் ஓய்வு கொண்டிருக்கும் அந்த விலங்கு லாயத்தில் வீராவின் அருகில் உள்ள ஒரு திண்டின் மேல், ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போய் அமர்ந்திருந்த தீரா, தன்னை சுற்றிலும் இருந்த ஒளியானது சட்டென மங்கிப்போய் இருள் படர்ந்த நொடியே நிஜத்திற்கு வந்தாள். "ஆர்ஹ்ஹ்.. அதுக்குள்ள இன்னைக்கு பொழுது முடிஞ்சுருச்சா?" அலுத்துக்கொண்டு எழுந்தவள், வீராவை நோக்கித் திரும்பினாள்.

"வீரா, நா சொன்னது எல்லாம் நல்லா நியாபகம் வச்சுக்கோ டா. உன் பக்கத்துல என்னோட மாயவாயில் எப்போ தெறந்தாலும் ஒடனே நீ வந்துறனும். சரியா?" இன்று காலை முதலாக தனக்கு தெரிந்த எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்த அதே சொல்லை, அவள் வீராவிடமும் சொல்ல.. தீராவின் சொல்லுக்கு பதில் கொடுப்பதுபோல் கால்களை தூக்கிக்கொண்டு உற்சாகமாகக் கணைத்தான், வீரா.

"சரி டா வீரா, நல்லா ரெஸ்ட் எடு இப்போ. நா போய்ட்டு காலைல- இல்ல அப்பறமா எப்பயாச்சும் நேரம் கெடைக்கைல வாறேன்." தன் குதிரை நண்பனிடம் விடைபெற்று, வீட்டை நோக்கி நடந்தாள் அவள். அங்கோ, அவளை வரவேற்பது போலவே, தொங்கிய முகத்துடன் வாயிலிலேயே அமர்ந்திருந்தார்கள் நம் ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரும். அவர்களை கவனித்த தீரா, இவ்விருவரும் காரணம் இல்லாமல் இப்படி நாடகமாட மாட்டார்களே என எச்சரிக்கையுடனே அவர்களை நெருங்கினாள்.

"என்னங்க டி! ஏன் இப்டி கப்பல் கெளந்த போஸ்ல ஒக்காந்து இருக்கீங்க? அதுவும் வாசல்லயே?" இருவரின் முன்பாக சென்று நிற்க, அவளை நிமிர்ந்து நோக்கிய மாயா, "அந்த கொடுமைய ஏன் கேக்குற," மீண்டும் அதே நிலையிலேயே அமர்ந்துக் கொண்டாள். பின்பு, ரக்ஷாதான் அவளுக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கியது.

"இன்னைக்கு என்ன நாளு தீரு மா?"

"என்ன நாளு?"

"எங்களுக்கு கெட்ட நாளு" மாயா, சத்தமாக புலம்பியபடி இரு கன்னத்திலும் கை வைத்துக்கொள்ள, "அப்போ ஊருக்கே நல்ல நாளா தான் இருந்துருக்கும். ச்ச நா மிஸ் பண்ணிட்டேனே இந்த நாள" ரக்ஷாவுக்கு அடுத்ததாக அமர்ந்துக்கொண்டு, தானும் நொந்துக்கொண்டது போல தீராவும் கன்னத்தில் கை வைத்துக்கொள்ள.. மாயா, அவளை முறைத்ததை தொடர்ந்து அவள் முதுகிலேயே ஒரு அடியை வைத்தாள், ரக்ஷா.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now