விரைவில் சந்திக்கிறேன் உன்னை.

6 4 13
                                    

வட்ட வெண்ணிலா அந்த ஜன்னல் வழியாக அவ்வறைக்கு வெளிச்சம் சேர்த்துக் கொண்டிருக்க.. மின்சாரம் தடைபட்டிருந்த அந்த வேளையில் ரக்ஷவனின் அறைக்குள் வட்டமாக அமர்ந்திருந்தார்கள், அந்த ஐவர் குழு. கோவிலுக்கு வெளியில் நடந்த கதையை அர்ஜுன் சொல்ல.. உள்ளே நடந்த கதையை ரக்ஷவன் சொல்ல.. கதையை கேட்டுவிட்டு ஆளுக்கொரு சிந்தனையுடன் ஆழ்ந்தக் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஐவருமே. அனைத்து குழப்பங்களிலும் நம்பர்-ஒன் குழப்பமாக இப்போது இருப்பது கோவிலுக்குள் தோன்றிய ரகசிய அறையென அனைவரும் சேர்ந்து பெயர் வைத்திருக்கும் அந்த இடத்தில் ரக்ஷவன் சந்தித்த மனிதர், இறுதியாக கூறிய வார்த்தைகளே.

ரக்ஷவனின் மணிக்கட்டில் புதிதாக தோன்றியிருக்கும் வளையத்தையும் அதில் கோர்த்திருந்த சிறிய அளவிலான வாளையும் சுட்டிக்காட்டிய மயூரி, "இது எவ்ளோ பெருசா இருந்துச்சு?" தன் நண்பனின் முகத்தை நோக்க, "ரொம்ம்ம்ப. ...ராஜாலாம் யூஸ் பண்ணுற மாதிரி" அது தன் கையை பிடித்ததிலிருந்து தோன்றியிருந்த புதுவித பிரம்மிப்புடன் அந்தக் குட்டி வாளை பார்த்தபடி பதில் கொடுத்தான், அவன்.

"அப்பறம் ஏன் சின்னதா மாறுச்சு?" அடுத்த கேள்வியை ஹர்ஷன் கேட்க, "தெரியல.. கரெக்ட்டா நா இத எடுக்கப் போகைல அவரு வந்து நீ இன்னும் தயார் ஆகலன்னு சொன்னாரு.. இது இப்டி ஆகீருச்சு" ஆளாளுக்கு கேள்வி எழுப்பினாலும் ரக்ஷவனின் பார்வை மட்டும் அந்த கை-வளையத்தை விட்டு நீங்கவில்லை.

கோவிலில் இருந்து புறப்பட்டது முதல் ரக்ஷவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதிகாத்துக் கொண்டிருந்த அர்ஜுன், இறுதியாக, தன் கேள்வி-வரிசையை மொத்தமாகக் கேட்டுவிடலாம் என முடிவெடுத்து, மணிக்கட்டையே உற்று நோக்கிக் கொண்டிருப்பவனை தன்னை நோக்கி திருப்பிவிட்டான்.   

"ஒருவேள.. நீ தயார் ஆனதும் இது மறுபடியும் பெருசா ஆகீறுமோ?"

"இருக்கலாம்."

"ரக்ஷவ், எல்லாத்தையும் நல்லா யோசிச்சு பாரு, அத்த என்ன சொன்னாங்க? நீ சாதாரான பையன் இல்ல.. உனக்குன்னு ஏதோ பெரிய பொறுப்பு இருக்கு.. அதுக்கு நீ ரெடியாகனும்... அதுக்காக தான் நீ கோவிலுக்கு போகனும்ன்னு சொன்னாங்க. அங்க கோவில்ல நீ பாத்தவரும் இதையே தான் சொல்லிருக்காரு. இதுலருந்தே தெரியுது டா நீ எதுக்கோ ரெடி ஆகணும்ன்னு" 

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Onde histórias criam vida. Descubra agora