9. புனிதமான ஒரு புராணம்

7 2 6
                                    

நான் சொர்க்கத்திலிருந்து இறக்கிய இந்த தே புராணத்தையே உலக மக்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு வசனமும் என்னால் ஆணையிடப்பட்டவை. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்திற்கும் இந்தப் புராணத்தில் உள்ள நெறிமுறைகள் பொருந்தும். எவனொருவன் இதன்படி வாழவில்லையோ, அவன் குலத்தின் மீதே பாவக்கறை படியும். மேலும் அவன் எமது (தே) சாபத்திற்கு ஆளாவான்.

-தே புராணம் – அத் 29, 05:51

--- 9 ---

புனிதமான ஒரு புராணம்

சரியாக ஒரு வருடம் கழித்து வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் 'இரண்டாம் கூட்டம்' என்னும் நிகழ்வு அன்று நடந்தது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் பேரரசர் டாவி, அமைச்சர் காத் தவிர நாட்டின் ஐந்து மாநிலங்களை ஆளும் அரசர்களும் அவர்களது பிரதம அமைச்சர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மூலர் அந்தக் கூட்டம் இருந்த இடத்திற்கு வருகை புரிந்தார். அவருக்குப் பின்னால் அவரது சீடர்கள் கட்டுக் கட்டாகப் பல கோப்புகளைத் தூக்கிக் கொண்டு வந்தனர். இந்த நாளுக்காகத்தான் மூலர் பல மாதங்கள் காத்திருந்தார். பல நாட்கள் அயராது உழைத்ததின் பலனை இன்று அவர்களுக்கு அளிக்கப் போகிறார். அவரது முகத்தில் முக்கால்வாசி அளவிற்குத் தாடி பரவி கிடந்தது.

காத் 'தற்போது காண்பது தான் அழைத்து வந்த மூலர்தானா' என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். அவரின் கையில் பாப்பிரஸ் காகிதத்தினால் ஆன ஒரு புத்தகம் இருந்தது. அதைப் பேரரசர் டாவியிடம் பணிவுடன் சமர்பித்தார். "இதற்கு நாங்கள் வைத்துள்ள பெயர் 'தே புராணம்' அரசே. தே என்னும் கடவுளின் அவதாரம் மண்ணுலகில் நடத்திய சாகசங்களையும், அக்கடவுள் உருவாக்கிய 'தேனவம்' என்ற மதத்தின் நெறிமுறைகளையும் விளக்கும் ஒரு புனித நூலாக இது எழுதப்பட்டுள்ளது" அக்கனத்த புத்தகத்தைப் பெருமையுடன் வாங்கி, அதை பயபக்தியுடன் சில பக்கங்கள் புரட்டிவிட்டு, பிறகு அதை அமைச்சர் காத்திடம் அளித்தார் டாவி.

கடவுள் தொழில்Where stories live. Discover now