புனித யாத்திரை

6 1 4
                                    

அறிவிப்பு

இந்தக் கதையானது கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு கற்பனைப் படைப்பாகும். தீவிர மத நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இந்நூலை வாசிப்பதைத் தவிர்க்கலாம். மேலும் கதையில் வயது வந்தோர் (18+) மட்டும் படிக்கும் சில பகுதிகள் உள்ளன. எனவே பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் இந்நூலை வாசிப்பதை தவிர்த்தல் நலம்.

***

ஓர் உண்மையான தேனவன் தன் வாழ்நாளில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஏழு கடைமைகளில் ஏழாவது மற்றும் இறுதியான கடமையானது, ராத் மலைப்பகுதியில் உள்ள தேவின் ஆலயத்திற்குப் புனித யாத்திரை சென்று வருவதாகும். மேலும் புதிய தே புராணத்தின்படி வசதி இருப்போர் மட்டுமின்றி அனைத்து தேனவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம் அந்தப் புனித ஆலயத்திற்கு யாத்திரை சென்றே ஆக வேண்டும். அப்போதுதான் கடவுள் தேவின் ஆசி என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கும்.

-புனிதமிகு நீக்கர் திரு. தீரபு

--- 14 ---

புனித யாத்திரை

'உன் கடவுள விட, உன் சாஸ்திர சம்பிரதாயத்த விட, உன் முன்னோர்கள் வெங்காயம் வெளக்குமாத்த விட, உன் அறிவு பெருசு அத சிந்தி' என்ற பெரியாரின் குரல் அரவிந்த் கேட்டுக் கொண்டிருந்த யூடியுப் காணொளியில் இறுதியாக வந்தது. தற்போது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தனது காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவன், அந்தக் காணொளி முடிந்ததும் தனது புளூடூத் ஹெட்செட்டை பாஸ் செய்தான். அந்தக் காரில் அவனது தாய் தந்தை மற்றும் நண்பர்களான தேவுவும், ஜாமரும் வந்தனர்.

சிஞ்சி மாநிலத்தில் இருந்து தேநாட்டின் வடக்கே உள்ள ராத் மாநிலத்திற்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அம்மாநிலத்தின் வடபகுதி எல்லையில்தான் ராத் மலைப்பகுதி இருந்தது. அங்கிருந்த ஒரு மலையின் உச்சியில்தான் மாபெரும் கற்களாலும் பாறைகளாலும் கட்டப்பட்ட கடவுள் தேவின் பிரம்மாண்டமான ஆலயம் ஒன்று உள்ளது. பேரரசர் தேஜா தனது தந்தையின் நினைவாக, தே கொலை செய்யப்பட்ட இடத்தில் அக்கோவிலைக் கட்டியிருந்தார்.

கடவுள் தொழில்Donde viven las historias. Descúbrelo ahora