பயணம் -7

1.7K 100 22
                                    

கதிரவன் காலை நேரத்திலேயே சற்று மங்கலாக இருந்தான், அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி, இன்று மழை வரும் என்ற குரல் அங்கும் இங்குமாய் நடத்து சென்றிருந்த மக்களிடம் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

"ராணி, மாடியில வத்தல் காய வச்சேன், போயிட்டு எடுத்துக்கிட்டு வா டி, மழை வர மாதிரி இருக்கு" என சாவித்திரி குரல் கொடுக்க, "அட போங்க மா, இந்த சித்திரையில மழையா?, ஒன்னும் வராது போ போயிட்டு வேலைய பாருங்க..." என பதில் கூறினாள் ராணி.

அடுத்த ஐந்து நிமிடத்தில் படபட வென தூரல் போட, " ராணி, மேல போ டி சீக்கிரம், பாரு மழை வருது" என்றாள் சாவித்திரி, சற்று மிரட்டும் குரலில்.

"இதோ போயிட்டே இருக்கேன் மா..." என குரல் கொடுத்துக்கொண்டே வேகமாக படி ஏறினாள்.

வத்தல் முழுவதையும் எடுத்து கீழே கொடுத்துவிட்டு மீண்டும் மாடிக்கு செல்ல முடிவெடுத்தாள், "ராணி, ரொம்ப நேரம் நினையாத டி, காய்ச்சல் வரும்..." என்ற  தன் அம்மாவின் குரல் கேட்டும் கேட்காதது போலவே மாடிப்படி ஏறினாள்.

மழையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தாள்.

சற்று திரும்பி ஏதிர் மாடியை பார்க்க, அங்கே ராஜாவும் மழையில் மயங்கிக்கொண்டிருந்தான்.

ராணியின் நானம், அவளின் அழகிய கன்னத்தை சிவக்க வைத்தது, ராஜா தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக வேகமாக படி இறங்க, அவள் கடைசி படியில் கால் வைக்க, ராஜாவின் பார்வையில் ராணி சிக்கினாள்.

உள்ளுணர்வின் தூண்டுதலோ, காதலின் கண்ணாம்பூச்சி ஆட்டமோ எதுவென தெரியவில்லை அந்த நொடியே ராணியும் திரும்பி ராஜாவை பார்த்தாள்.

மழை சாரலில் தன்னவனை பார்க்க தயங்கும் மனம்,
மனதின் பேச்சை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மாடியை தேடியது அவளின் மாயக் கண்,
மாயக்கண்ணிடம் சிக்காமல் மாயமாகிப் போனான் மன்னவன்,
இன்று மாயமானாலும்
என்றும் என் மாயவலையில்
மாட்டப்போகும் என் மணாளன் - நீ தான்

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now