பயணம் 13

1.7K 93 39
                                    

கதிரவன் தன் முகத்தை இப்பாருலகிற்கு காட்ட, பறவைகளும் தன் சிறகு விறித்து பறக்க துவங்கியது.

காலையில் எழுந்திருக்க ராஜாவின் அண்ணி ராதிகா வைத்திருந்த அலாரம் தன் பணியை சரியாக செய்ய முயற்சித்தது, மொபைலில் இருந்து அலாரம் சப்தம் ஒலிக்க துவங்கிய முதல் கனமே ராதிகா அதனை ஸ்னூஸ் (snooze) செய்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அலாரம் ஒலிக்க ராதிகா எழுந்து, குழந்தைகளையும் எழுப்பினாள்.

ராணி படுத்திருந்த மெத்தை காலியாக இருக்க, அவள் எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, ராணி பால்கனியில் அமர்ந்திருந்தாள்.

" என்னமா சீக்கிரம் எழுந்தாச்சா?" என ராதிகா கேட்க, " இல்லக்கா தலைவலி அதான் " என்றாள்.

" டீ ஆடர் பண்ணியா? " என ராதிகா கேட்க, இல்லை என்றவாறு தலையசைத்தாள் ராணி.

"சரி நான் எல்லாருக்கும் தேவையானதை ஆடர் கொடுத்துட்டு வரேன், நீ ரூம்ல படு கொஞ்ச நேரம் " என கூறிவிட்டு சென்றாள்.

ஜென்னல் கதவை திறந்துவிட்டு மெத்தை மேல் விழுந்தாள் ராணி.

விடிந்ததில் இருந்து ராணியை பார்க்கவே இல்லையே என யோசித்த ராஜா நேராக அவர்கள் அறைக்கு சென்றான்.
"அண்ணி.... "என குரல் கொடுத்துக்கொண்டே அறைக்குள் ராஜா நுழைய, "கீழ காபி டீ ஆடர் சொல்ல போயிருக்காங்க" என குரல் கொடுத்தாள் ராணி.

அவனின் முகத்தை நேரில் பார்க்க வெட்கப்பட்டு போர்வைக்குள் தன் முகத்தை புதைத்தாள். ராணியின் உணர்வை அறிந்த ராஜா கதவை மூடிவிட்டு அறையில் இருந்து வெளியேரினான்.

"தம்பி, உங்கள தான் தேடுரேன் , இன்னைக்கு நாம பாக்க போகிற இடம் வில்வாரணி, சூரக்காடு, பூஞ்சோலை . அடுத்து ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல ஐயன்பாலையம்னு ஒரு மலைப்பிரதேசம் இருக்கு அங்க இரவு தங்கிடலாம் சரிதானே தம்பி" என ட்ரைவர் கேட்க, "நீங்க சொல்லரபடியே போகலாம் அண்ணா" என பதில் கூறினான் ராஜா.

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now