ஆள்...

193 34 62
                                    

அந்த இடம் யாருக்கு சொந்தம்ன்னு தெரியல. அத கண்டுபிடிக்கணும். அப்ப தான் இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வரும்.

அப்ப எனக்கு ஒரு போன் வந்துச்சு. பேசுனது ஒரு ஆண்.

"ஹலோ... ஜெகன் சாரா???", என்றது அந்த குரல்.

"ஆமா... நீங்க...", என்றேன்.

"சார்... நான் லேப்ல இருந்து பேசுறேன்... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...", என்றது அந்த குரல்.

"சொல்லுங்க...", என்றேன்.

"சார்... phoneல பேச வேணாம்... நீங்க நான் சொல்ற இடத்துக்கு வாங்க... நேர்ல எல்லாம் சொல்றேன்...", என்றது அந்த குரல்.

"சரி...", என்றேன்.

அந்த குரல் சொன்ன இடத்துக்கு போனேன். அது ஒரு பூங்கா. அங்க நிறையபேர் இருந்தாங்க. என்ன வர சொன்ன அந்த ஆள் யாருன்னு எனக்கு தெரியல. அதே நம்பருக்கு போன் பண்ணேன்.

அங்க ஒரு தலை மட்டும் அங்கயும் இங்கயும் சுத்தி சுத்தி பாத்துச்சு. அந்த தலை என் பக்கம் திரும்பி பாத்ததும் கைய தூக்கி சைகை காட்டுச்சு. எனக்கு போன் பண்ணது அந்த ஆள் தான்னு புரிஞ்சுச்சு. அந்த ஆள் கிட்ட போனேன்.

"சார்... நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன்...", என்றான் அந்த இளைஞன். அவனுக்கு 25 வயசு தான் இருக்கும். ரொம்ப சின்ன பையன் மாதிரி இருந்தான்.

"நான் உன்ன லேப்ல பாத்ததே இல்லயே...", என்றேன்.

"சார்... நான் ஜூனியர் லேப் அசிஸ்டண்ட்... என்ன நீங்க பாத்துருக்க வாய்ப்பு இல்ல...", என்றான்.

"சரி... என்ன சொல்லணும்... சொல்லு...", என்றேன்.

"சார்... நீங்க கொண்டுவந்த sample பத்தி தான் சார்...", என்றான்.

"அந்த sample பத்தி report அன்னைக்கே வாங்கீட்டேனே...", என்றேன்.

"அது partial report தான் சார்... detailed report நீங்க இன்னும் வாங்கல... அதை நீங்க வாங்கீருந்தா இந்நேரம் இந்த கேஸ் முடிஞ்சுருக்கும்...", என்றான்.

என்ன சொல்றான் இவன்... கொழப்புறானே...

"என்ன சார் குழப்பமா இருக்கா???", என்றான்.

"ஆமா...", என்று சொல்லி தலைய ஆட்டுனேன்.

"சார்... அன்னைக்கி குடுத்த reportல அந்த sampleஅ completeஆ test பண்ணல சார்... அந்த sampleல என்ன கலந்துருக்குன்னு மட்டும் தான் அன்னைக்கி test பண்ணீருந்தாங்க. அந்த sampleஓட lifetime calculate பண்ணவேயில்ல... அப்டி பண்ணீருந்தா உங்களுக்கு ஏதாவது clue கெடச்சுருக்கும்...", என்றான்.

"என்ன சொல்ற???", என்றேன் கொஞ்சம் குழப்பத்தோட.

"சார்... அந்த sampleஓட complete report இது தான்... இத படிச்சு பாத்துட்டு லேப்க்கு வாங்க... உங்களுக்கு இன்னும் கொஞ்சம் clues காத்துக்கிட்டு இருக்கு...", என்று சொல்லி ஒரு fileஅ என் கையில திணிச்சுட்டு அவசரமா கெளம்புனான்.

எனக்கு குழப்பம் இன்னும் தீரல. இன்னும் அந்த ஷாக்லயே உக்காந்து இருந்தேன்.

"ஹேய்... உன் பேரு என்னன்னு நீ சொல்லவேயில்ல...", என்றேன்.

"என் பேரு கார்த்திக்...", என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே கூட்டத்துல கலந்துட்டான்.

அந்த fileஅ எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். அந்த report... ரொம்பவே பெரிய clue... இந்த timeல இப்டி ஒரு clue கிடைக்கும்ன்னு நான் நெனச்சு கூட பாக்கல. காலைல லேப்க்கு போகணும். அங்க வேற என்ன clue அவன் வச்சுருக்கான்னு பாக்கணும். Fileஅ பத்தரமா எடுத்து வச்சுட்டு தூங்க போனேன்.

Aye.Jey... Part - 1Where stories live. Discover now