💕3💕

1K 62 43
                                    

நான் மெதுவா என் பேக் எல்லாம் எடுத்துக்கிட்டு கீழ  இறங்கி வந்தேன்..நந்து என்ன பாத்துட்டா.. எப்பிடியாவது சீக்ரம் தப்பிச்சு போகணுமே.. சரி ஏதாவது பொய் சொல்லிட்டு போக வேண்டியது தான் ..

"அண்ணி எங்க போறீங்க "னு கேட்டா

யாருக்கு யார் அண்ணி.. இவங்க பேமிலில எல்லாரும் லூசு தானா.. ச்சே

" நந்து.. ப்ளீஸ் நந்து.. மதர் கால் பன்னிட்டாங்க.. நான் போயி ஆகணும்..அங்க எதோ ப்ரோப்லம் மாம்.. போயிடு வரேன்.. அப்ரோ ப்ளீஸ் இனி அண்ணினு எல்லாம் கூப்பிடாதே..உங்க அண்ணி நான் இல்ல.. மது  தான்.. புரியுதா...

ஒரு லெங்க்தீ டயலாக் ஆஹ் பேசிட்டு வெளிய வந்துட்டேன்..பஸ் ஸ்டாப்ல ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டே இருந்தேன்.. ஒரு பஸ் ஆஹ் கூட காணோம்.. கடுப்பாகுது..அப்பா என் முன்னாடி ஒரு கார் வந்து வேகமா சடன் பிரேக் போட்டு நின்னது.. அந்த ஆதி மட்டும் வரட்டும். இங்க இருக்கிற பாறாங்கல்லை தூக்கி போட்டு மண்டைய ஒடைக்கிறேன்..பாரு..ஆனா கார்லா வந்தது அவன் இல்ல..ராஜிவ் அண்ணா தான் வந்தாங்க..

அண்ணா வந்து என்கிட்ட எதுமே பேசல.. கைல இருந்த பேக் ஆஹ் வாங்கினாங்க.. நான்  தர மாட்டிண்டேன்.. அதுக்கு அவுங்க பார்த்த பார்வை இருக்கே.. அப்ப்ப்ப்ப்பாஆ.. நான் கைய விட்டுட்டேன்.

"வண்டில ஏறு "  னு கோவமா சொன்னங்கா..நான் அப்டியே சிலை  மாறி நின்னேன்..

அதுவரைக்கும்  கோவமா முகத்த  வெச்சி்ருந்த அண்ணா சிரிச்சாங்க..
"லூசு இப்ப எதுக்கு ஓவர் ஆக்ட் பண்ணிட்டு இருக்க.. யாராவது கால சுளுக்கு பிடிச்சா ஊருக்கு போவாங்களா.. வா லூசு." னு சிரிச்சிட்டே சொன்னாங்க

.ரைட்டு.. அந்த பிராடு நாய்ங்க அண்ணா கிட்ட ஏதும் சொல்லல போல..
அண்ணாக்கிட்ட  நான்  வரலன்னு சொல்லலாம்னு நினைச்சேன்..ஆனா

" இங்க பாரு சங்கரி..எனக்கு நீயும் மதுவும் வேற வேற இல்ல.. என்னை நீயும் அண்ணாவா நினைச்சா கூட வா.. இல்லனா கெளம்புனு சோகமா சொன்னாங்க..
இவர் எவ்ளோ நல்லவரா இருக்காங்க.. ஆனா அவுங்க..
"அண்ணா ப்ளீஸ்" னு சொல்லி முடிகிறதுக்குள்ள என் கைய தரதரனு இழுத்து பிடிச்சி உள்ள உக்கார வெச்சிட்டாரு..
"இப்ப எதுக்கு நீ சீன் போடர.. மதுக்கும் உனக்கும் சண்டையா. நந்தினி ஏதாவது உன்ன சொல்லிட்டாளா" னு அவர் கேட்டாரு..

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 12, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தி கிரேஸி கேர்ள்Where stories live. Discover now