அரும்பு - 10

1.4K 94 32
                                    

                                        "என் பெயரை செல்லச்சுருக்கமாய்

                                         உன் இதழ்கள் உச்சரிக்கும் போதும்

                                         என் நினைவெல்லாம் நீயே"

மணி இரண்டு பதினைந்து என கடிகாரத்தில் காட்டியது. ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து அப்போதுதான் வெளி வந்தான் பிரபு. பின் ஹாஸ்பிட்டலில் உள்ள தன்அறைக்குச் சென்று குளித்து விட்டு உடை மாற்றி வந்தான். அவனுக்கு நல்ல பசி. சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் செல்ல புறப்பட்டான். அப்போது தான் பிரபுவிற்கு நினைவு வந்தது, "சத்யா சாப்பிட்டிருப்பாளா?" என்று உடனே வீட்டிற்குச் சென்றான்.

வீட்டில் மிகவும் அமைதி நிலவியிருந்தது. "அம்மா" என்று அழைத்துக் கொண்டே உள்ளே சென்றான் பிரபு. பிரபுவின் அம்மா ஸ்ரீவித்யா அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் அறைக்குச் சென்று, "அம்மா எல்லாரும் சாப்பிட்டீங்களா? சதூ சாப்பிட்டாளா?" என்று பிரபு கேட்டான்.

அப்போது ஸ்ரீவித்யா, "நாங்க ஒவ்வொரு மாதமும் இதே நாளில் விரதம் இருப்போம் என்று உனக்குத் தெரியாதா பிரபு?" "இன்று எதுவும் தெரியாத மாதிரி புதுசா கேட்கிற" என்று கேட்டார்

"ஓ சாரிம்மா மறந்துட்டேன்". அப்படின்னா, "சதூ இன்னும் சாப்பிடவில்லையா" - பிரபு.

"என்னது? "சதூவா?" யார் அது?" என்று கேட்டார் ஸ்ரீவித்யா.

ஐயையோ! மனசுக்குள்ளே சத்யா பெயரை சுருக்கி "சதூ" என்று அழைத்துப் பார்ப்பதை, இப்போதும் வாய்விட்டு சொல்லிட்டேனே... இப்போது அம்மாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது?, "அது... அது வந்தும்மா, சத்யா சாப்பிட்டாளா என்று கேட்டேன்" என சமாளித்தான் பிரபு.

அட அந்தப் பொண்ணை மறந்துட்டேன் பாரு, நம்ம வீட்ல அந்தப் பொண்ணு இருக்கா என்று சுத்தமாக ஞாபகமே இல்லை பிரபு. அவ ரொம்ப பசியோட இருப்பாளே. நீ போய் அவளை கீழே கூட்டிட்டு வா, அதுக்குள்ள நான் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று கூறி, சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றார். அவள் இன்னும் சாப்பிடவில்லை என்றதும், பிரபு அவளை, "சதூ" என்று கூறியதை மறந்து விட்டார் ஸ்ரீவித்யா.

என் நினைவவெல்லாம் நீயே...!!! Donde viven las historias. Descúbrelo ahora