அரும்பு - 13

1.6K 74 63
                                    

                                                             

"பிரிவென்ற சொல்லையே விரும்பாதவர் - இன்று
அவரை விட்டு வெகுதூரம் சென்று - நிரந்திரமாய்
பிரிந்து சென்றதை அறியாமல் இருக்கிறார்
என் நினைவெல்லாம் நீயே"

வான்மண்டலம் முழுதும் ஆங்காங்கே வெண்மேகங்கள் பஞ்சு பஞ்சாய் பொதிந்திருக்க, ஆகாய வண்ண நீல நிறத்தில் வெண்மை நிறம் கலந்து அழகாய்
காட்சியளிக்க, வான்வெளி எங்கும் வெள்ளி சதங்கை போல் ஜொலித்து வான் நட்சத்திரங்கள் ஒளிவீச, அதன் நடுவே பௌர்ணமி நாளின் அம்சமாய் ஒளிர்விட்டு பிரகாசிக்கும் வெண்ணிற நிலாமகள் உலா வரும் இரவு நேரம். நிசப்தமான இந்த இரவு நேரத்தில் அனைவரும் உறங்கச் சென்றிருக்க, சதுமித்ரா மட்டும்
விழித்திருந்தாள். அனைவரும் நன்றாக உறங்கும் வரை அந்த அறையைத் திறந்து பார்க்க வேண்டாம் என முடிவு செய்தாள். ஏனெனில், "சத்தம் கேட்டு யாரவது வந்துவிட்டால்?" அதனால், "உடனே திறந்து பார்க்க வேண்டும்" என்ற தன் ஆவலை அடக்கி, அதுவரை வெளியே தோட்டத்தில் இருக்கலாம் என நினைத்தாள்.

ஓசை எழுப்பாமல், மாடியிலிருந்து கீழே வந்தாள். யாரும் அறியாமல் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த விதம் ஒரு அழகிய பதுமை போலிருந்தது. பௌர்ணமி நிலா வெளிச்சம் அவள் மேனியில் பட்டு பனிச் சிற்பம் போல இருந்தாள். அப்போது தண்ணீர் எடுத்துவிட்டு தன் அறைக்கு வந்த பிரபு, அங்கு ஜன்னல் கதவுகள் மூடாமல் இருப்பதை பார்த்தான். அதை சாத்துவதற்காக ஜன்னல் அருகே வந்தான். திரையை எடுத்துவிட போக, தூரத்தில் கீழே சதுமித்ரா அமர்ந்திருப்பதை பார்த்து, "இவள் எப்போது இங்கு வந்தாள்? இவ்வளவு நேரம் அறையில் தானே இருந்தாள்?" என மனதில் நினைத்தவன், ஒரு புறமாய் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவளின் தோற்றத்தில் தன்னைத் தொலைத்து பிரம்மித்து போய் நின்றான். நிலா ஒளியில் வானிலிருந்து வந்த வென்பனிச் சிற்பம் போல இருந்தாள் அவள். அவன் மனதோ, அவள் இருந்த நிலை கண்டு அதில் ஈர்க்கப்பட்டு கண் இமைக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு.

என் நினைவவெல்லாம் நீயே...!!! Dove le storie prendono vita. Scoprilo ora