ஓடும் குருதியிலே...!

64 16 4
                                    

என்ன தவறு செய்தது

எங்கள் பச்சிளம் குழந்தை...?

என்ன தவறு செய்தது?- பாவம்

எதுவுமறியா மழலை...!

பள்ளி சென்று,

துள்ளித் திரிந்து,

கண்கள் நிறையக் கனவுகளோடு

மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள்

அவர்கள்...!

உறையுள் இழந்து!

உடைமைகள் இழந்து!

உறவுகளை இழந்து!

அநியாயமாகக் கொல்லப்பட்டு!

கொடுமைகளுக்கு உள்ளாகும்

அவலம் ஏனோ...?


எங்களின் சகோதரர்கள் அவர்கள்...!!

எங்களின் சகோதரிகள் அவர்கள்...!!

ஓடும் குருதியிலும்,

மரண ஓலங்களிலும்,

உயிர்களைக் கொல்லும்

மனித மிருகங்களே...!

உங்கள் இதயங்களில்,

அன்பையும், இரக்கத்தையும்,

எங்கே இரவல் கொடுத்தீர்கள்...?


முஸ்லிம்கள் என்ற ஒரே

காரணத்திற்காக,

எங்கள் சிரிய மக்களை,

சிறியவர் பெரியவர் பாராமல்

கொன்று குவிக்கும்

கொடூரம் ஏனோ...?


கண்களில் கண்ணீர் வழிகிறது...!

உள்ளங்கள் ஓலமிட்டு அழுகின்றன...!

உலகம் இதையெல்லாம்

உள்வாங்க மறுக்கின்றதே...!

உலகம் சிரியாவுக்கு

உதவ மறுக்கின்றதே...!


பயங்கரவாதப் போர்வையில்

அப்பாவி மக்களைக் கொல்லும்,

கல் நெஞ்சம் படைத்த

நீங்கள் எதனைத்தான்

சாதிக்கப் போகிறீர்கள்...?!


இறைவா!

அவர்கள்,

எங்கள் குழந்தைகள்...!

எங்கள் சகோதரர்கள்...!

எங்களின் தாய் தந்தை போன்றவர்கள்...!

அதுவும் எங்களின் சமுதாயம்...!

அவர்களைக் காத்தருள் 

இறைவா...!

அவர்களிள் கஷ்டங்களை

நீக்கிவிடு இறைவா...!

எங்களைப் போல் எத்தனையோ

உள்ளங்கள்,

அவர்களுக்காக அழுதழுது கேட்கும்

பிரார்த்தனைகளை 

ஏற்றுக் கொள் இறைவா...!

சாதி மதம் பாராமல்,

எல்லா உள்ளங்களையும் உருக வைத்த

இந்த அவலங்களை எல்லாம், 

உன் உதவியால் நீக்கிவிடு இறைவா...!


இனிமேலும் எழுத முடியவில்லை...

Pray For #Syria









ஓடும் குருதியிலே...Where stories live. Discover now