நறுமணம் 1

19.5K 278 92
                                    


நறுமுகை pov:

ஒரு பொண்னு கொஞ்சம் அழகு கம்மியா பொறந்துட்டா.....அச்சச்சோ பொண்னு இப்புடி இருக்குறாளே நாளைக்கு யாரு இவள கல்யாணம் பன்னிப்பான்னு சொல்லி அவ மனச நோகடிக்குறது....

ஒரு பொண்னுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறக்கலன்னா மலடின்னு சொல்லி அவ மனச நோகடிக்குறது....

இப்புடி பொண்ன மட்டுமே குறை சொல்ற சமுதாயந்தாங்க இன்னும் இருக்குது......அது ஏன்னு நம்ம கேள்விக்கேட்டா....அதிகமா பேசாதன்னு நம்மளையே அடக்குறது.....

அப்புடிப்பட்ட சமுதாயத்தைதான் நான் அடியோட வெறுக்குறேன்........

என் பேரு நறுமுகை....எங்க வீட்டு கடைக்குட்டி நான்தான்...

எங்க வீட்டுல நான்...என் அம்மா அப்பா....அக்கா....என்னோட அப்பத்தான்னு அஞ்சு பேரு....

என் அம்மா நாச்சியார் தேவி....அப்பா வடமலையான்......ரெண்டு பேரும் அந்த காலத்துலையே  காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டவங்க.....இன்னும் அந்த அன்பு ரெண்டு பேர்க்குள்ளையும் குறையாம அப்புடியே வாழ்ந்துட்டு வராங்க....

என் அக்கா பேரு தேன்மொழி.....எங்கவீட்டு   குடும்ப குத்துவிளக்கு.......எங்க எல்லாரோட செல்லம்.....என்னைய யார்க்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டா.....நானும் அதே மாதிரிதான்....அவன்னா எனக்கு உசுரு.....

என்னோட அப்பத்தான்  கோமலவள்ளி...ஆனா பெரிய வில்லி😂😂.....
அவுங்களுக்கு என் அம்மாவ பாத்தாலே புடிக்காது....அதுக்கு காரணம் என் அம்மா கொஞ்சம் கலர் கம்மியா இருப்பாங்க.....
அதோட அப்பா அவுங்க பேச்ச கேட்காம அம்மாவ கல்யாணம் பன்னிக்கிட்டதால...
அம்மாதான் அப்பாவ மயக்கி அவங்கக்கிட்ட இருந்து பிரிச்சிட்டதா அவுங்களுக்கு ஒரு அபிப்ராயம்.....
அதுமட்டும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே பெண் குழந்தைங்களா பொறந்துட்டோம் அந்த கோவம்......
அதுனால என் அம்மாவ அவுங்க வார்த்தைகளால வேதனைப்படுத்துவாங்க....

அம்மா அதை எப்பவும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க.....

நீங்களே சொல்லுங்க.....ஒரு பொன்னுக்கு தேவை அழகா???இல்லை நல்ல மனசா??எதுன்னு நீங்க நினைக்குறிங்க.....

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now